தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் லேட்டஸ்ட் அறிவிப்பு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் லேட்டஸ்ட் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் லேட்டஸ்ட் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் லேட்டஸ்ட் அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி வழங்குவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே தள்ளுபடி பெற தகுதியானவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகள் உட்பட அனைவருக்கும் நகைக்கடன் வழங்கி வருகிறது. இந்த கடன்கள் அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரும்பாலானோர் பயனடைந்து வருகின்றனர். தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன் 5 சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அனைவரும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

அந்த சமயத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. அதனால் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 5 சவரனுக்கு மேல் நகைக்கடன் பெற்றிருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது. அதேபோல் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருந்தால் நகைக்கடன் கிடையாது என்றும், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

சென்னையில் நாளை 5 மணி நேரம் வாகன போக்குவரத்திற்கு தடை – காவல்துறை உத்தரவு!

அந்த வகையில் நகைக்கடன் பெற தகுதியானவர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடம் உரிய அடையாள அட்டை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தள்ளுபடிக்கு தேர்வு செய்யப்பட்ட 48.84 லட்ச நகைக்கடன்களில் 10.18 லட்ச நகைக்கடன்களே தள்ளுபடிக்கு தகுதியானவையாக உள்ளது. மற்ற அனைத்தும் தள்ளுபடி பெற தகுதியற்ற 40 கிராமிற்கு அதிகமாக, முறைகேடு செய்யப்பட்டு நகைக்கடன் பெற்றவை போன்றவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here