மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!

தற்போது 7வது சம்பள கமிஷனின்படி ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் டிஏ உயர்வு அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் எந்த அளவுக்கு உயரும் என்ற விவரங்களை இப்பதிவில் காணலாம்.

அகவிலைப்படி உயர்வு

ஊதிய உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த ஊடக அறிக்கைகளின்படி, அடுத்த மாதம் முதல் ஊழியர்கள் அகவிலைப்படி அதிகரிப்பை காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்படும் என தெரிகிறது.

Exams Daily Mobile App Download

இப்போது, மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான காரணியான அகில இந்திய CPI-IW தரவு சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இப்போது டிஏவைக் கணக்கிட பயன்படுத்தப்படும் முக்கிய காரணிகளில் ஒன்றான AICPI குறியீடு அரசு ஊழியர்களுக்கான அடுத்த DA உயர்வை உறுதிபடுத்தி இருக்கிறது. இது குறித்த ஊடக அறிக்கைகளை நம்பினால், ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படி தொகை 4% ஆக அதிகரிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்குப் பிறகு, ஒட்டுமொத்த DA 38 சதவீதமாக இருக்கும்.

தமிழகத்தில் நாளை (ஜூலை 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இப்போது ஊடக ஆதாரங்களின்படி, மத்திய நிர்வாகம் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் டிஏ அறிவிப்பை வெளியிடலாம். இவை வெறும் ஆரம்பகால யூகங்கள் மட்டுமே. இப்போது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத நிலுவைத் தொகையை கூடுதலாக பெறுவார்கள். அந்த வகையில் 38% ஆக DA தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டால் அரசு ஊழியர்களின் அடிப்படை வருமானம் கணிசமாக அதிகரிக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

  • அடிப்படை சம்பளம் – ரூ 18,000
  • தற்போதைய DA 34% – DA உயர்வு மாதத்திற்கு ரூ.6120
  • புதிய டிஏ 38 சதவீதம் – மாதத்திற்கு ரூ.6840 டிஏ உயர்வு
  • டிஏ அதிகரிப்பு – ரூ.6840- 6120 = ரூ.720 மாதத்திற்கு
  • ஆண்டு சம்பள உயர்வு ரூ.720X12= ரூ.8640
  • அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:
  • அடிப்படை சம்பளம் – ரூ.56900

  • புதிய DA 38% – DA உயர்வு மாதத்திற்கு ரூ.21622
  • தற்போதைய டிஏ 34 சதவீதம் – மாதத்திற்கு ரூ.19346
  • DA அதிகரிப்பு ரூ.21622-19346= ரூ.2276 மாதத்திற்கு
  • ஆண்டு அதிகரிப்பு – ரூ.2276 X12= ரூ.27,312

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!