இளைஞர்களுக்காக அரசின் சூப்பர் அறிவிப்பு – 49,000 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப உத்தரவு!

0
இளைஞர்களுக்காக அரசின் சூப்பர் அறிவிப்பு - 49,000 காலிப்பணியிடங்கள் - விரைவில் நிரப்ப உத்தரவு!
இளைஞர்களுக்காக அரசின் சூப்பர் அறிவிப்பு - 49,000 காலிப்பணியிடங்கள் - விரைவில் நிரப்ப உத்தரவு!
இளைஞர்களுக்காக அரசின் சூப்பர் அறிவிப்பு – 49,000 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப உத்தரவு!

உத்திர பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டில் 49,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நாடு முழுவதும் மக்கள் வேலை வாய்ப்பை பெறுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஏனென்றால் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு ஆகியவற்றின் விளைவாக ஏராளமான தங்களது வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக கடும் சவால்களை சந்தித்தனர். இதனால் மீண்டும் பணிக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இவர்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அத்துடன் மாநில அரசுகளுடன் இணைந்து தனியார் துறைகளும் மக்களின் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப அவர்களுக்கான உரிய வேலைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் உத்திர பிரதேச மாநில அரசு 2023 ஆம் ஆண்டில் 49,000 இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு – Update செய்யப்பட்ட Link வெளியீடு!

Exams Daily Mobile App Download

மருத்துவத் துறையில் காலியாக உள்ள 14,000 மருத்துவர் மற்றும் துணை மருத்துவர், காவல்துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள், சிவில் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 35, 000 என மொத்தமுள்ள 49,000 பணியிடங்கள் 2023ம் ஆண்டில் நிரப்பப்படும் என்று உத்திரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. மேற்கண்ட காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பும் படி மாநில அதிகரிகாரிகளுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!