கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

0
கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மே 4 முதல் ஜூன் 20 வரை மொத்தம் 48 நாட்கள் கோடை விடுமுறை விடப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்து ஆன்லைன் முறையில் தேர்வுகள் எழுதப்பட்டன. அதுமட்டுமின்றி பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் கண்டிப்பான முறையில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 14 முதல் கோடை விடுமுறை!

மேலும், கோடை வெயில் காரணமாக வருடம் வருடம் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் பாதி நாட்களிலே முழு ஆண்டு தேர்வு நடத்தி அதற்கான விடுமுறையை விடுவர். ஆனால் இந்த வருடம் கோடை காலம் ஆரம்பித்து கோடை விடுமுறை விடாமல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த சோர்வுடன் இருக்கின்றனர். அதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி சனிக்கிழமைகளில் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று பரிசீலனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இதன்படி, மத்திய கல்வி துறை கட்டுப்பாட்டில் செயல்படும், கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மட்டும், இரண்டாம் பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. மற்ற மாணவர்களுக்கு, புதிய கல்வி ஆண்டு வகுப்புகள் தொடங்கி விட்டன. இந்நிலையில், கோடை விடுமுறை மே 4ல் துவங்குவதாக, கே.வி.சங்கதன் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 20 வரை, 48 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!