தாயகம் திரும்பும் 5 தமிழர்கள் உட்பட 470 இந்தியர்கள் – ஏர் இந்தியா விமானம் ஏற்பாடு!

0
தாயகம் திரும்பும் 5 தமிழர்கள் உட்பட 470 இந்தியர்கள் - ஏர் இந்தியா விமானம் ஏற்பாடு!
தாயகம் திரும்பும் 5 தமிழர்கள் உட்பட 470 இந்தியர்கள் - ஏர் இந்தியா விமானம் ஏற்பாடு!
தாயகம் திரும்பும் 5 தமிழர்கள் உட்பட 470 இந்தியர்கள் – ஏர் இந்தியா விமானம் ஏற்பாடு!

உக்ரைனில் இருந்து இன்று ருமேனியா வழியாக 5 தமிழர்கள் உட்பட 470 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் AI -1943 என்கிற சிறப்பு விமானத்தின் மூலமாக தாயகம் திரும்பவுள்ளனர். இவர்களின் செலவு அனைத்தையுமே அரசே பொறுப்பேர்த்துள்ளது.

தாயகம் திரும்பும் இந்தியர்கள்:

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து உக்ரைனில் வேலைக்காக தங்கி இருந்தவர்கள் அனைவருமே சொந்த நாட்டுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். ஆனால் ரஷ்யா உக்ரைன் நாட்டில் இருக்கும் அனைத்து விமான படைகளையும் அழித்துவிட்டது. இதனால் வெளிநாட்டு பயணிகள் தங்கள் சொந்த தாய்நாட்டுக்கு திரும்பமுடியாத சூழல் ஏற்பட்டது.

மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசுக்கு தொடரும் கோரிக்கை!

உக்ரைனில் மட்டுமே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினிடம் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். உக்ரைன் தனது வான்வழியை மூடிவிட்டதால் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி மற்றும் ருமேனியா நாடுகளின் எல்லை வழியாக அவர்களை பாதுகாப்பாக மீட்க ஆலோசனை நடத்தினர். அதன்படி இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் 4 ஏர் இந்தியா விமானங்கள் ஈடுபட்டன.

அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய பயன்பாடுகள்!

5 தமிழர்கள் உட்பட 470 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் AI -1943 என்கிற சிறப்பு விமானத்தின் மூலமாக ருமேனியாவின் புக்காரெஸ்ட் நிலையத்தில் இருந்து மும்பை செல்லவுள்ளனர். இந்த ஏர் இந்தியா விமானம் மாலை 4 மணிக்கு மும்பை சென்றடையும் என எதிர்ப்பார்க்கப்டுகிறது. மேலும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர ருமேனியாவுக்கு 2 விமானங்களும் ஹெங்கேரிக்கு 1 விமானமும் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா சான்றிதழ் இல்லாத பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பரிசோதனை செலவை விமான நிலையமே ஏற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here