பள்ளி மாணவர்களுக்கு 47 நாட்கள் கோடை விடுமுறை – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
பள்ளி மாணவர்களுக்கு 47 நாட்கள் கோடை விடுமுறை - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு 47 நாட்கள் கோடை விடுமுறை - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு 47 நாட்கள் கோடை விடுமுறை – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

கோடை காலம் ஆரம்பித்து விட்டால் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை விரைவில் நடத்தி முடித்து, கோடை விடுமுறை அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதன்பேரில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மே 23 (நாளை) முதல் கோடை விடுமுறை தொடங்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

47 நாட்கள் கோடை விடுமுறை:

கொரோனா காலகட்டத்தில், மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு, ஆண்டு இறுதித் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடை வெயில் வெளுத்து வாங்குவதால், பல மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளிக் கல்வித்துறை கோடை விடுமுறை குறித்த முக்கிய உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.

TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Answer Key பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

இந்த உத்தரவின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிவில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மே 23, 2022 முதல் தொடங்கி 47 நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு ஜம்மு பிரிவு அல்லது கோடை மண்டலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த அறிவிப்பின் படி, 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைகள் மே 23 (நாளை) முதல் ஜூலை 9 வரை என்றும், 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை மே 30 முதல் தொடங்கி ஜூலை 9 வரை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் தற்போது நிலவும் வெப்பமான கால நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரிவில் உள்ள பள்ளிகளுக்கு வழக்கமாக 10 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும். ஜம்மு மற்றும் காஷ்மீர் பின்பற்றும் காலண்டரின் படி, ஜம்மு பிரிவு பள்ளிகளுக்கு நீண்ட கோடை விடுமுறையும் காஷ்மீர் பிரிவு பள்ளிகளுக்கு நீண்ட குளிர்கால விடுமுறையும் கிடைக்கும். காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் குளிர்கால விடுமுறை கிடைக்கும் அதே சமயம் ஜம்மு பிரிவு பள்ளிகளுக்கு குறுகிய குளிர்கால விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here