Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – ரூ.417 முதலீட்டில் ரூ.40 லட்சம் வருமானம்! முழு விபரம் இதோ!

0
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் - ரூ.417 முதலீட்டில் ரூ.40 லட்சம் வருமானம்! முழு விபரம் இதோ!
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் - ரூ.417 முதலீட்டில் ரூ.40 லட்சம் வருமானம்! முழு விபரம் இதோ!
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – ரூ.417 முதலீட்டில் ரூ.40 லட்சம் வருமானம்! முழு விபரம் இதோ!

தற்போது வங்கிகளுக்கு இணையாக சில சேவைகளை வழங்கி வரும் போஸ்ட் ஆபீஸ் நிறுவனங்கள், தினசரி ரூ.417 முதலீட்டில் ரூ.40 லட்சம் வரை வருமானம் பெறும் ஒரு சூப்பர் திட்டத்தை வழங்கி வருகிறது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

சூப்பர் திட்டம்

இந்த கொரோனா கால கட்டம் ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறது. பொதுவாக சேமிப்புகளை விரும்பாத பலரும் சம்பாதிக்கும் பணத்தை மொத்தமாக செலவு செய்து விட்டு இந்த கொரோனா பேரிடர் காலத்தில் திண்டாடி விட்டனர். அதனால் தற்போது சேமிப்பு மீதான பார்வை மக்களிடம் அதிகம் வேறுபட்டிருக்கும் நிலையில் பலரும் இதனை ஒரு பழக்கமாக மாற்ற துவங்கியுள்ளனர். இந்த சேமிப்பு திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு எளிமையானதாக தென்படுவது வங்கி சேவைகள் மட்டும் தான்.

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நவம்பர் – டிசம்பர் தேர்வு கால அட்டவணை 2021 | வெளியீடு!

ஆனால் குறைந்த சேமிப்பில் நல்ல வருமானம் ஈட்டும் வங்கிகளுக்கு இணையான சிறந்த சேவைகளை போஸ்ட் ஆபீஸ் திட்டங்களும் அளிக்கின்றன. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் ஒவ்வொருவருக்கும் சிறந்த சேமிப்பு அனுபவங்களை வழங்குகிறது. அதாவது, PPF திட்டம் மூலம் ஒருவர் ஒரு நாளைக்கு ரூ.417 முதலீடு செய்தால் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும். இப்போது தினசரி ரூ.417 என்ற அளவில் இத்திட்டத்தில் மாதம் ரூ.12,500 வரை சேமிக்க முடியும். இத்தொகை ஒரு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் ஆகும்.

இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் என கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல 7.1% வட்டி தொகையும் கிடைக்கிறது. அதனால் கணக்கின் மெச்சூரிட்டி காலத்தை கணக்கிடுகையில் வட்டித் தொகை மட்டும் ரூ.18.18 லட்சம் வரை ஈட்டலாம். மேலும் மெச்சூரிட்டியின் போது ஒருவருக்கு 40.68 லட்சம் ரூபாய் மொத்தமாக கிடைக்கும். இது தவிர கணக்கின் முதிர்ச்சி காலத்துடன் கூடுதலாக 5 ஆண்டுகள் வரை ஆண்டு தோறும் ஒன்றரை லட்சம் முதலீடு செய்தால், இதன் மொத்த தொகை ரூ.37.50 லட்சமாக மாறும்.

திருவாரூர் மாவட்டத்தில் டிச.15ம் தேதி உள்ளூர் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

இதனுடன் 7.1 % வட்டி தொகையை கணக்கிட்டால் ரூ.65.68 லட்சம் வரை லாபம் ஈட்டலாம். இத்தொகையை 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலீடு செய்தால் மொத்தம் ரூ.1.03 கோடி வரை கிடைக்கும். இந்த PPF கணக்கு துவங்க விரும்புபவர்கள் சம்பளம் பெறுபவர்களாகவோ, சுயதொழில் செய்பவர்களாகவோ, ஓய்வூதியம் பெறுபவர்களாகவோ இருக்கலாம். மேலும் இந்த கணக்கை துவங்க இந்திய குடி மகனின் அடையாள சான்று, முகவரி சான்று, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் பதிவு படிவம் E ஆகியவை தேவைப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!