இந்த ஆண்டில் புதிய பட்டதாரிகளுக்கு 40% வேலைவாய்ப்புகள் – ஆய்வு அறிக்கை வெளியீடு!

0
இந்த ஆண்டில் புதிய பட்டதாரிகளுக்கு 40% வேலைவாய்ப்புகள் - ஆய்வு அறிக்கை வெளியீடு!
இந்த ஆண்டில் புதிய பட்டதாரிகளுக்கு 40% வேலைவாய்ப்புகள் - ஆய்வு அறிக்கை வெளியீடு!
இந்த ஆண்டில் புதிய பட்டதாரிகளுக்கு 40% வேலைவாய்ப்புகள் – ஆய்வு அறிக்கை வெளியீடு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் உருவான பாதிப்புகள் நீங்கி நிறுவனங்கள் பலவும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் 40% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய வேலைவாய்ப்புகள்

நடப்பு ஆண்டில் இந்தியாவில் உள்ள படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு பொன்னான ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டில் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் 40% ஆக உயர்ந்துள்ளதாக வேலைவாய்ப்பு தளமான நவுக்ரி (Naukri) தகவல் அளித்துள்ளது. இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு ஆண்டில் வேலைவாய்ப்பு செயல்பாடுகளில் புதிய பட்டதாரிகளுக்கு மட்டும் 61% பங்கு இருக்கிறது. இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் 4 முதல் 7 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டவர்களுக்கு 37% வாய்ப்பு தயாராக இருக்கிறது.

Exams Daily Mobile App Download

மேலும் 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு சுமார் 27% வேலைவாய்ப்பும், 13 முதல் 16 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்களுக்கு 26% வரையும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது. அடுத்தபடியாக 8 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு 22% பங்கு தயாராக உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக உலகளவில் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கிய கொரோனா தொற்று மூலம் வேலைகளும், புதியவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டன.

HDFC, SBI & ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்கள் உயர்வு!

இப்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனா தொற்று பாதிப்புகளில் இருந்து மெல்ல மீண்டு வருவதால் பணியமர்த்தல் நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளதாக இந்த தரவுகள் கூறுகிறது. அந்த வகையில் மெட்ரோ நகரங்கள், சிறிய நகரங்கள் ஆகியவற்றில் புதியவர்கள், அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் என அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாக அறிக்கைகள் கூறுகிறது. இதில், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் சுற்றுலாத் துறையில் 357% வேலைவாய்ப்புகள் உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து ரீட்டெய்ல் துறையில் 175%, ரியல் எஸ்டேட் துறையில் 141%, இன்சூரன்ஸ் துறையில் 126% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!