TCS நிறுவனத்தில் புதிய நிதியாண்டில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

3
TCS நிறுவனத்தில் புதிய நிதியாண்டில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
TCS நிறுவனத்தில் புதிய நிதியாண்டில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
TCS நிறுவனத்தில் புதிய நிதியாண்டில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தற்போது நடைபெற்று வரும் 2021-22 ஆம் நிதியாண்டில் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஐடி வேலைவாய்ப்பு:

இந்தியாவில் செயல்பட்டு வரும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்று அழைக்கப்படும் TCS நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது. TCS நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்கான பணியமர்த்தல் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2021-22 ஆம் நிதியாண்டில் ஏறக்குறைய 40,000 க்கும் மேற்பட்ட புது ஊழியர்களை அந்நிறுவனம் பணியமர்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றம்!

இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் TATA நிறுவனத்தில் தற்பொழுது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தனியார் துறையில் மிகப்பெரிய இடத்தை வகித்துள்ள இந்நிறுவனம் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும், கடந்த 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 40,000 பட்டதாரிகளை பணியமர்த்தியுள்ளது. மேலும் அந்த ஊழியர்களின் எண்ணிக்கையுடன் TATA நிறுவனம் இன்னும் சிறப்பாக செயல்படும் என்று உலகளாவிய மனித வளத்துறை தலைவர் மிலிந்த் லக்காட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்ற போதிலும் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில் எந்த சிரமும் ஏற்படாது எனவும், கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 3.60 லட்சம் பேர் நுழைவு தேர்வில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் TATA நிறுவனத்தில் 40,000 க்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி கணபதி சுப்பிரமணியம் கூறுகையில், ‘இந்தியாவில் திறமையுள்ள ஊழியர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்றும், அவர்களின் திறமை மற்றும் பணி கலாச்சாரம் ஆகியவை தனித்துவம் மிக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!