ஏழை எளிய குழந்தைகளுக்கு மாதம் ரூ. 4000 உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க!

0
ஏழை எளிய குழந்தைகளுக்கு மாதம் ரூ. 4000 உதவித்தொகை - ஆட்சியர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க!
ஏழை எளிய குழந்தைகளுக்கு மாதம் ரூ. 4000 உதவித்தொகை - ஆட்சியர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க!
ஏழை எளிய குழந்தைகளுக்கு மாதம் ரூ. 4000 உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க!

ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக ஏகப்பட்ட நலத்திட்டங்களை அரசு செய்து வரும் நிலையில், மத்திய அரசின் Mission Vatsalya நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ் நிதி பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

நிதி திட்டம்:

மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலனிற்காக ஏகப்பட்ட நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் Mission Vatsalya எனப்படும் நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ், பெற்றோரை இழந்த குழந்தைகள், அம்மா அப்பா என இருவரில் ஒருவர் இறந்த குழந்தைகள், எச்.ஐ.வி, எய்ட்ஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மேலும் இந்த நோய்களால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை கொண்ட குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், கணவரை இழந்த விவாகரத்தான பெற்றோரால் கைவிடப்பட்டு பாதுகாவலர் பராமரிப்பிலுள்ள குழந்தைகள் ஆகியோர் 18 வயதிற்குட்பட்டவராயின் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறலாம்.

மேலும் குழந்தைத் தொழிலாளர் அல்லது குழந்தை திருமணம் அல்லது பாலியல் வன்கொடுமை அல்லது வேறு சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கல்வி பயிலவும், தொழிற்கல்வி பயிலவும், நிதி ஆதரவு மற்றும் வளர்ப்பு பராமரிப்பு ஒப்பளிப்பு குழுவினரால் பரிந்துரை செய்யப்படும் தகுதி உள்ள குழந்தைகளுக்கு Mission Vatsalya திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி 01.04.2022 முதல் மாதம் ரூ.4000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மதுரையில் நாளை (செப்.30) பவர்கட் – முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த நிதி உதவி பெற கிராமபுறத்தில் வாழும் குழந்தைகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.24,000-லிருந்து ரூ.72,000 எனவும், நகர் புறத்தில் வாழும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.36,000-லிருந்து ரூ.96,000 ஆக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருமான வரம்பிற்குட்பட்ட மற்றும் தகுதிவாய்ந்த மேற்கண்ட வகையிலான 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், இந்த திட்டத்தில் நிதி பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2818, வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் – 626003 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 04562-293946 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!