பொதுத்துறை வங்கிகளில் 400 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பு – தனியாரில் தாராளம்!

0
பொதுத்துறை வங்கிகளில் 400 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பு - தனியாரில் தாராளம்!
பொதுத்துறை வங்கிகளில் 400 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பு - தனியாரில் தாராளம்!
பொதுத்துறை வங்கிகளில் 400 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பு – தனியாரில் தாராளம்!

இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் இந்த ஆண்டுக்கான புதிய பணியமர்த்தல் பணிகள் 400 என்ற வகையில் மிக குறைவாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தனியார் துறை வங்கிகள் 17,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வங்கித்துறை வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் தற்போது புதிய பணியமர்த்தல் தொடர்பான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதாவது பொதுத்துறை வங்கிகள் (PSBs), நாட்டின் அனைத்து வணிக வங்கிகளிலும் மிகப்பெரிய ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் 2021 ஆம் நிதியாண்டில், 400க்கும் குறைவான பணியாளர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.

DC vs RR Live Score – டெல்லி கேபிட்டல்ஸ் நிதான ஆட்டம்! 9 ஓவர்கள் முடிவில் 56/2

இதற்கிடையில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட வணிக வங்கிகளின் சமீபத்திய அடிப்படை புள்ளிவிவரங்களின் படி, இது இந்திய வங்கி வரலாற்றில் மிகக்குறைந்த சேர்க்கையாக கருதப்படுகிறது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டை விட இந்த வேலைவாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு, சில வங்கி நிறுவனங்களை பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்ததால் சுமார் 38,000 ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை PSB பணியமர்த்தியதிய போதிலும், 2020 இல் மொத்த பணியாளர்கள் 7.7 லட்சமாக குறைந்தது. வங்கி இணைப்புகளைத் தொடர்ந்து கிளைகளை பகுத்தறிவு செய்வதும் வேலைவாய்ப்பு சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. மறுபுறம், தனியார் மற்றும் சிறிய நிதி வங்கிகள் 2020 மற்றும் 2021 இரண்டிலும் பணியமர்த்துவதில் பற்றாக்குறையை ஈடுசெய்தன.

அந்த வகையில் 2020 இல் கிட்டத்தட்ட 1 லட்சம் ஊழியர்கள் தனியார் வங்கிகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2021 ல் சுமார் 50,000 ஆக இருந்தது. மேலும் 2020 இல் தனியார் வங்கிகள் 78,000 க்கும் அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தாலும், 2021 ல் புதிய சேர்க்கைகளின் எண்ணிக்கை 17,000 ஆகக் குறைந்தது. இதேபோல், சிறு நிதி வங்கிகள் 2019 இல் சுமார் 40,000 புதியவர்களை சேர்த்தது. மேலும் 2021 இல் சுமார் 9,000 பேர் பணியமர்த்தப்பட்டனர்.

சிறந்த coaching centre – Join Now

குறிப்பாக மார்ச் 2021 நிலவரப்படி, வெளிநாட்டு மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட வங்கித் தொழில், நாடு முழுவதும் 15.6 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை பெற்றிருந்தது. இப்போது பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைப்பு இயக்கத்திற்கு உட்பட்டு, தனியார் மயமாக்கல் மற்றும் பகுத்தறிவு செயல்பாடுகளுக்கு மத்தியில், இந்திய வங்கிகளில் பணியமர்த்தல் 2021 இல் 1.8% மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது கடந்த நிதியாண்டை விட இந்த எண்ணிக்கை மிகக்குறைவு என தரவுகள் கூறுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!