பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு!!

0
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு!!
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு!!
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு!!

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை கவுன்சிலிங் மூலம் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தரம் உயர்த்துதல்:

தமிழக அரசு மாநிலம் முழுவதும் நடத்தி வரும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேவையை பொறுத்து பள்ளிகளின் தரத்தை உயர்த்தும். 10ம் வகுப்பு வரை இருக்கும் உயர்நிலை பள்ளிகளை 12ம் வகுப்பு வரை தரம் உயர்த்தி மேல்நிலைப்பள்ளியாக அறிவிக்கும். பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் பள்ளியின் உட்கட்டமைப்பு, ஆய்வக வசதிகள், புதிய வகுப்பறைகள் போன்ற வசதிகளை அமைத்து கொடுக்கும்.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!

பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை:

2020-2021ம் ஆண்டில் தமிழகத்தில் 40 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இயக்குனர் பொன்னையா அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 2020-2021 நடப்பு கல்வி ஆண்டில், 40 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றி நியமிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் 40 தலைமை ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் நடத்த வேண்டும். மாவட்டத்தில் காலியிடங்கள் இல்லாவிட்டால் வேறு மாவட்டத்த்தில் பணியில் சேருவதற்கான விண்ணப்பங்களை பெற்று இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். மாறுதல் பெற்றவர்கள் உடனடியாக பள்ளியில் சேர வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!