கோவை சுகாதாரத் துறையில் ரூ.40000 வரை சம்பளத்தில் வேலை – நாளை (டிச.16) கடைசி நாள்!

0
கோவை சுகாதாரத் துறையில் ரூ.40000 வரை சம்பளத்தில் வேலை - நாளை (டிச.16) கடைசி நாள்!
கோவை சுகாதாரத் துறையில் ரூ.40000 வரை சம்பளத்தில் வேலை - நாளை (டிச.16) கடைசி நாள்!
கோவை சுகாதாரத் துறையில் ரூ.40000 வரை சம்பளத்தில் வேலை – நாளை (டிச.16) கடைசி நாள்!

கோவையில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் குடும்ப நலத்துறை, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதனால் தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். அத்துடன் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து அரசு அலுவலகங்களில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!

அதன்படி துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் குடும்ப நலத்துறை, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு தகுதியான நபர்களை நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் அல்லது https://coimbatore.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அத்துடன் விண்ணப்பங்களை நாளைக்குள் (டிச.16) சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் சமர்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை விரைவு தபால் மூலமாக அனுப்ப விருப்பம் உள்ளவர்கள் உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 641018 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் தற்போது பணியின் பெயர், காலிப்பணியிடங்கள், தகுதி, சம்பளம், வயது வரம்பு பற்றி விரிவாக பார்க்கலாம்.

பணியின் பெயர்: District Quality Consultant For Coimbatore for Coimbatore District
 • காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
 • கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்தவராக இருப்பது அவசியம்.
 • மாத சம்பளம்: ரூ. 40,000 ஆயிரம்
 • வயது வரம்பு: 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்
பணியின் பெயர்: IT- Coordinator (LIMS) for Coimbatore District
 • காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
 • கல்வித்தகுதி: MCA/ BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் இருத்தல் வேண்டும்
 • மாத சம்பளம்: ரூ.21000
 • வயது வரம்பு: 23- 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்
பணியின் பெயர்: Block Account Assistant, Anaimalai Block
 • காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
 • கல்வித்தகுதி: B.COM கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் Tally முடித்திருக்க வேண்டும்
 • மாத சம்பளம்: ரூ.12000
 • வயது வரம்பு : 23- 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்
பணியின் பெயர்: Labour Mobile Medical unit Driver
 • காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
 • கல்வித்தகுதி: கனரக வாகனம் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமம் (Heavy license) வைத்திருக்க வேண்டும். 2 வருட முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்
 • மாத சம்பளம்: ரூ.9000
 • வயது வரம்பு: 20-35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்
பணியின் பெயர்: Labour mobile medical unit attender cum cleaner
 • காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
 • கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் முதல்
 • மாத சம்பளம்: ரூ.6500
 • வயது வரம்பு: 20 -35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here