PF அக்கவுண்ட்டில் இருக்கும் Balance தொகையை அறிந்து கொள்ளும் 4 வழிகள் – பயனர்கள் கவனத்திற்கு!

0
PF அக்கவுண்ட்டில் இருக்கும் Balance தொகையை அறிந்து கொள்ளும் 4 வழிகள் - பயனர்கள் கவனத்திற்கு!
PF அக்கவுண்ட்டில் இருக்கும் Balance தொகையை அறிந்து கொள்ளும் 4 வழிகள் - பயனர்கள் கவனத்திற்கு!
PF அக்கவுண்ட்டில் இருக்கும் Balance தொகையை அறிந்து கொள்ளும் 4 வழிகள் – பயனர்கள் கவனத்திற்கு!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்கள் வீட்டில் இருந்தபடியே EPF இருப்பை சரிபார்க்க முடியும் என்பதை அறிவித்துள்ளதோடு, அதற்கான 4 எளிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

PF இருப்பு தொகை:

பணியாளர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம், அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் இது ஊழியர்களின் PF அக்கவுண்ட்டில் சேர்க்கப்படும். இந்த தொகையை ஊழியர்கள் தங்கள் பணி ஓய்வு நிலையில், அல்லது அதற்கு முன்னதாக கூட தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம். ஊழியர்களின் PF கணக்கில் இருக்கும் தொகையை அறிந்து கொள்வதற்கு தற்போது பல வழிகள் உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் கானகத்தில் இருக்கும் தொகையை அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே EPF இருப்பை சரிபார்க்க முடியும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, EPFO சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, EPF இருப்பை சரிபார்க்க உதவும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸ் முறை:

ஒரு எஸ்எம்எஸ் மூலம் வீட்டில் இருந்தே EPF கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம். எஸ்எம்எஸ் மூலம் EPF இருப்பை சரிபார்க்க, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 க்கு ‘EPFOPHO UAN LAN’ ஐ அனுப்ப வேண்டும்.

மிஸ்டு கால் முறை:

மிஸ்டு கால் மூலம் உங்களது கணக்கில் உள்ள தொகையை அறிந்து கொள்ள பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் இணைந்த ‘சத்யா’ நடிகை ஆயிஷா – மெகா சங்கம எபிசோடு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இணையதளம்:

epfindia.gov.in இல் உள்ள EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து ஒருவர் தனது EPF இருப்பை சரிபார்க்கலாம். EPFO இணையதளத்தில் இருந்து இந்த சேவையைப் பெற, ஒருவர் ‘EPF பாஸ்புக் போர்ட்டலுக்கு’ சென்று UAN கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். இப்போது ஒருவர் ‘பதிவிறக்கம் அல்லது பாஸ்புக் பார்த்தல்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் EPF இருப்பை சரிபார்க்கலாம்.

UMANG ஆப்:

UMANG பயன்பாட்டின் மூலம். இந்தச் சேவையைப் பெற, ஒருவர் EPFO-க்குச் சென்று, ‘பணியாளர் மையச் சேவைகள்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, ஒருவர் ‘பாஸ்புக்கைக் காண்க’ என்பதைத் தேர்ந்தெடுத்து பாஸ்புக்கைப் பார்க்க UAN உடன் உள்நுழைய வேண்டும்.

இது தொடர்பான விவரங்கள் மற்றும் கேள்விகள் ஏதேனும் இருந்தால் EPFO உறுப்பினர்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in ல் சென்று அறிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!