2023: மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நிலவரம் – முன்னிலை வகிக்கும் பாஜக!

0
2023: மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நிலவரம் – முன்னிலை வகிக்கும் பாஜக!

இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலை நடத்தி உள்ள நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை:

இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் மாதம் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை அறிவித்தது. இவற்றில் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல்களும் அறிவிப்பின்படி நடத்தப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மூன்றாம் தேதியான இன்று நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  • 3 மணி நிலவரப்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 54 இடங்களிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.
  • ராஜஸ்தான் மாநிலத்தின் 199 தொகுதிகளில் பாஜக அதிக பட்சமாக 112 தொகுதிகளில் முன்னிலையும், காங்கிரஸ் 71 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.
  • மத்திய பிரதேசம் மாநிலத்தின் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 64 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
  • இதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 65 இடங்களிலும், பி ஆர் எஸ் 40 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலைக்குள் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்று முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!