மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4 % அகவிலைப்படி உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 4 % அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 4 % அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4 % அகவிலைப்படி உயர்வு!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 4% வரை உயரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக உயரும். அத்துடன் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கும்.

அகவிலைப்படி:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா தாக்கத்திற்கு பிறகு கடந்த ஆண்டு முதல் அகவிலைப்படி 2 கட்டமாக உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது அகவிலைப்படி 31% ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயரும் என்றும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 42 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்கள் இதோ!

இந்த அகவிலைப்படி 2022 ஜனவரி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படி மேலும் 4% வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. 4% உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயரும். இதனால் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அதிகரிக்கும்.

Exams Daily Mobile App Download

அதாவது அடிப்படை சம்பளம் ரூ.56,900 பெறும் நபர் 38% அகவிலைப்படி உயர்வால் மாத ஊதியத்தில் ரூ 21,622 அதிகரிக்கும். மேலும் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபர் 38% அகவிலைப்படி உயர்வால் மாதம் ரூ.6840 கூடுதலாக பெறுவர். தற்போது வெளியான அகவிலைப்படி உயர்வு தகவலை அடுத்து மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை தொகையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!