இந்திய ஐடி நிறுவனங்களில் 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – TCS முதல் Infosys வரை இலக்கு!

0
இந்திய ஐடி நிறுவனங்களில் 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - TCS முதல் Infosys வரை இலக்கு!
இந்திய ஐடி நிறுவனங்களில் 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - TCS முதல் Infosys வரை இலக்கு!
இந்திய ஐடி நிறுவனங்களில் 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – TCS முதல் Infosys வரை இலக்கு!

இந்தியாவில் ஐடி சேவைகள் துறையில் கிட்டத்தட்ட 4.5 லட்சம் வேலை வாய்ப்புகள் இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நுண்ணறிவு நிறுவனமான UnearthInsight அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிக வேலைவாய்ப்புகள்:

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் இந்தியாவில் பல தொழில் துறைகளும் கடும் பாதிப்பை சந்தித்தது. தொடந்து தொழிலகங்கள் செயல்படாத காரணத்தால் பொருளாதார சரிவு ஏற்பட்டது. ஆனால் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் ஐடி துறையில் எந்த விதமான பாதிப்பையும் சந்திக்கவில்லை. ஆனால் வழக்கத்தை விட அதிக அளவில் வருவாய் ஈட்டி, லாபத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில், சந்தை நுண்ணறிவு நிறுவனமான UnearthInsight தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – திருமலை செல்லும் வழித்தடங்கள் சீரமைப்பு!

அதன்படி, இந்தியாவில் ஐடி சேவைகள் துறையில் 2022ம் நிதியாண்டில் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட 4.5 லட்சம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை இரண்டாம் பாதியில் 17-19 சதவிகிதம் அதிக தேய்மானத்தைக் காணும். இந்த காலகட்டத்தில் சுமார் 1.75 லட்சம் பேர் பணியாளர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டில் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, ஆண்டின் இரண்டாம் பாதியில் தொழில்துறையில் 12 சதவீதம் கூடுதல் பணியாளர்கள் காணப்படுவார்கள் என்று UnearthInsight இன் நிறுவனர் மற்றும் CEO கௌரவ் வாசு அறிவித்துள்ளார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம்? அமைச்சர் விளக்கம்!

இதனால் நாட்டில் உள்ள டிசிஎஸ் முதல் இன்ஃபோசிஸ் வரையிலான 30க்கும் மேற்பட்ட பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கிட்டத்தட்ட 2.50 லட்சம் புதியவர்கள் பணியமர்த்த முடிவு செய்து உள்ளனர். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ், காக்னிசன்ட், எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய முதல் ஐந்து ஐடி நிறுவனங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. இதனால் மொத்தமாக 4.50 லட்சம் ஊழியர்கள் இந்த துறையில் நியமிக்கப்பட உள்ளனர். Unearthinsight இன் அறிக்கையின் படி, 2030 ஆம் ஆண்டுக்குள் IT சேவைத் துறையில் கிளவுட் சேவைகள் மூலம் சுமார் $80-100 பில்லியன் வருமானம் அதிகரிக்கும். மென்பொருள் தயாரிப்பு மற்றும் இயங்குதள வணிகம் 2030 ஆம் ஆண்டுக்குள் 15-20 பில்லியன் டாலர் வருமானத்தை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!