மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – இந்த வாரத்தில் வெளியாகும் அறிவிப்பு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு - இந்த வாரத்தில் வெளியாகும் அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு - இந்த வாரத்தில் வெளியாகும் அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – இந்த வாரத்தில் வெளியாகும் அறிவிப்பு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவது குறித்து இந்த வாரத்தில் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி 4 சதவீதம் வரை DA உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு:

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் மத்திய / மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு தொழில்துறைகள் இயங்க தொடங்கியதால் அரசுக்கு வருவாய் வர தொடங்கியது. இதனால் மீண்டும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்கள் 34% உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். மறுபுறம் மாநில அரசு ஊழியர்களுக்கு DA உயர்வில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

சென்னையில் மெரினா கடற்கரையில் புதிதாக ஸ்மார்ட் கடைகள்? முக்கிய அறிவிப்பு!

மேலும் கடந்த ஜனவரி முதல் DA 3 தவணை நிலுவையில் உள்ளது. அதாவது 2 + 3 + 3 என 3 தவணைகள் மீதமுள்ளது. அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டால், நிலுவைத்தொகையும் 11 சதவீதம் வரை உயரக்கூடும். இந்நிலையில் DA உயர்த்தி வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை இந்த வாரத்தில் கூடி விவாதிக்க உள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

Exams Daily Mobile App Download

DA உயர்வானது Consumer Price Index (CPI) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் வருட சராசரி CPI 351.33 புள்ளிகளில் இருந்து 361.75 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதம் ஆக உயரக்கூடும். மாநில அரசு ஊழியர்களுக்கு 15 முதல் 18 சதவீதம் வரையிலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் ஊழியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here