சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான 4 இலவச சிகிச்சை மையம் – மாநகராட்சி அறிவிப்பு!

0
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான 4 இலவச சிகிச்சை மையம் - மாநகராட்சி அறிவிப்பு!
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான 4 இலவச சிகிச்சை மையம் - மாநகராட்சி அறிவிப்பு!
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான 4 இலவச சிகிச்சை மையம் – மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் 4 இலவச சிகிச்சை மையம் இயங்கி வருவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், அந்த இலவச மையங்கள் தொடர்பான அனைத்து விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை மையம்

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும், தெருநாய்களை கூட தத்தெடுத்து பலரும் வளர்த்து கொண்டிருக்கின்றனர். இந்த செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி சார்பில் நான்கு செல்லப்பிராணி சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும், இந்த மையங்களில் செல்லப்பிராணிகளுக்கு சாதாரணமாக ஏற்படும் நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Jio vs Airtel vs Vi நிறுவனங்களின் ரூ. 500க்குள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள்!

இது மட்டுமல்லாமல் செல்லப்பிராணிகளுக்கு நோய் அண்டாத வகையில் கால்நடை உதவி மருத்துவர்களால் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வெறிநாய்க்கடி நோயில்லா சென்னை என்கிற இலக்கை அடையும் பொருட்டு இலவசமாகவே செல்லப்பிராணிகளுக்கு Anti Rabies Vaccine வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் மட்டுமே திரு.வி.க. நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இலவச செல்லப்பிராணி சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றனர். அந்த சிகிச்சை மையங்களுக்கான முகவரியை பார்க்கலாம்,

  • திரு.வி.க. நகர் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், பல்லவன் சாலை திரு.வி.க. நகர், சென்னை -11 கோட்டம் – 68, மண்டலம் – 6.
  • நுங்கம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், பள்ளி தெரு, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034. கோட்டம் – 110, மண்டலம் -9.
  • கண்ணம்மாப்பேட்டை செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், முத்துரங்கன் சாலை, கண்ணம்மாப்பேட்டை, சென்னை – 600 017, கோட்டம் – 141, மண்டலம் -10
  • மீனம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், நேரு நெடுஞ்சாலை, மீனம்பாக்கம், சென்னை, கோட்டம் – 166, மண்டலம் -12.

மேலும், கடந்த நிதியாண்டில் மட்டுமே 21,020 செல்ல பிராணிகளுக்கு இந்த மையங்கள் மூலமாக சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேலும், செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் கண்டிப்பாக சென்னை மாநகராட்சி விதிகளின்படி செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் செல்ல பிராணிகளுக்கான உரிமத்தை ரூ.50 செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறைகளை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த சிகிச்சை மையம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here