தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 ல் உள்ளூர் விடுமுறை – காரணம் இதோ!

0
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 ல் உள்ளூர் விடுமுறை - காரணம் இதோ!
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 ல் உள்ளூர் விடுமுறை - காரணம் இதோ!
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 ல் உள்ளூர் விடுமுறை – காரணம் இதோ!

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி துவக்க விழாவையொட்டி வருகிற 28 ம் தேதி சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி:

சதுரங்கம் என்பது அறிவு சார்ந்த மற்றும் நம் மூளையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான விளையாட்டாகும். ஒவ்வொரு வருடமும் ஜூலை 20 ம் தேதி உலக சதுரங்க தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1966 ல் முதல் சதுரங்க தினம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐ நா வின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் வளர்ச்சிகான 2030 நிகழ்ச்சியில் இந்த கேம் முக்கிய பங்கு வகிக்கிறது என ஐ நா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. சதுரங்கம் பயிலும் போது பல நுணுக்கங்களை நியாபகம் வைத்து கொள்வதால் காலப்போக்கில் நியாபக சக்தியை அதிகரிக்க உதவி புரிகிறது.

Exams Daily Mobile App Download

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றிருந்த நிலையில் அந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். போட்டி முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மெய்யநாதன்,வேலு, மதிவேந்தன் ஆகியோர் முதல்வரிடம் எடுத்துரைத்தனர். மேலும் இந்த கூட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 துவக்க விழாவையொட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அது மட்டுமின்றி உலகெங்கும் உள்ள சதுரங்க ஆர்வலர்கள், போட்டியாளர்கள், பொதுமக்கள் தகவல் பெறும் வகையில் பிரத்யேகமான இணையதளம் மற்றும் மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு வருவது குறித்து விவரங்களையும் முதல்வர் கேட்டறிந்தார். போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும், மாமல்லபுரத்துக்கான போக்குவரத்து வசதி, பார்வையாளர்கள் சிரமமின்றி போட்டியை காண தேவையான வசதியை செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் இந்த கூட்டத்தில் தலைமை செயலர் இறையன்பு, நிதித்துறை செயலர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அபூர்வா செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அலுவலர் தாரேஸ் அகமது மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!