இந்தியாவில் அமலுக்கு வரும் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, குறையும் சம்பளம் – முழு விபரம் இதோ!

0
இந்தியாவில் அமலுக்கு வரும் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, குறையும் சம்பளம் - முழு விபரம் இதோ!
இந்தியாவில் அமலுக்கு வரும் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, குறையும் சம்பளம் - முழு விபரம் இதோ!
இந்தியாவில் அமலுக்கு வரும் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, குறையும் சம்பளம் – முழு விபரம் இதோ!

இந்தியாவில் நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய தொழிலாளர் சட்டம் ஊழியர்களுக்கு சாதகமாகுமா? இது பலன் அளிக்குமா? என பல தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது குறித்தும் இப்பதிவில் பார்க்கலாம்.

புதிய தொழிலாளர் சட்டங்கள்:

மத்திய அரசு, நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சம்பளம், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவு, பணிச் சூழல், பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான நான்கு தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இது ஊழியர்களின் சம்பளத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புதிய தொழிலாளர் சட்டத்தினை அமல்படுத்துவது மூலமாக ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.

நாளை மறுநாள் (ஏப்.24) முதல் ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

ஏனெனில் புதிய தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டங்களுக்கு பல எதிர்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் துறை ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால் மாநிலங்களின் ஒப்புதலும் தொழிலாளர் சட்டங்களுக்கு தேவை. எனவே சுமார் 23 மாநிலங்கள் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளன.

இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால் ஏற்படும் மாற்றங்கள்:

1. புதிய தொழிலாளர் சட்டங்களால் ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் (Take Home Salary) குறையும். புதிய சட்டத்தின்படி, ஊழியர்களுக்கு மாதாந்திர CTCயில் குறைந்தபட்சம் 50% அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும்.

2. மாத மொத்த சம்பளத்தில் 50%க்கு மேற்பட்ட தொகையை படித் தொகையாக பெற முடியாது.

3. PF பங்களிப்பும், Gratuity தொகையும் உயரும். மேலும் தினசரி பணி நேரம் மாற்றப்படுகிறது. அதாவது, தற்போது ஒரு நாளைக்கு பணி நேரம் 8 மணி நேரமாக உள்ளது. புதிய சட்டத்தில் 12 மணி நேரமாக மாற்றப்பட இருக்கிறது.

4. 12 மணி நேரமாக மாறும்போது வாரத்துக்கு வேலை நாட்களின் எண்ணிக்கையும் குறைகிறது. அதாவது, வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை. ஆக வாரத்துக்கு மொத்தம் 48 மணி நேரம் வேலை என்பது கட்டாயம் ஆகும்.

5. புதிய சட்டத்தின் படி, அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக ஆக உயர்ந்தால், அவரின் பிஎஃப் பங்களிப்பு தலா 6,000 ரூபாயாக அதிகரிக்கும். இதனால் ஊழியரின் Take home salary என்பது 88,000 ரூபாயாக இருக்கும். ஆக முன்பை விட 2,400 ரூபாய் குறையும். அதோடு அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது கிராஜ்விட்டியும் (Gratuity தொகை) அதிகரிக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!