வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

0
வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை - ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை - ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

பிரிட்டனில் ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் பணிபுரியும் முறையை அறிமுகம் செய்துள்ளனர். ஊழியர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த முயற்சி மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய வேலை திட்டம்:

உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகள் காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய நிறுவனங்கள் அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஊழியர்கள் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தி வேலை செய்தனர். இந்த நிலையில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிப்புகள் சற்று குறைய ஆரம்பித்தது. அதன் பிறகு ஊழியர்கள் அலுவலகத்தில் வந்து பணி புரிய அனுமதி அளித்தது. இந்த நிலையில் சில நாடுகள் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் பணிபுரியும் முறையை கொண்டு வந்தனர்.

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முக்கிய கோரிக்கை!

சில நாடுகளில் ஐடி துறையில் 4 நாட்கள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரசு அமீரகம், ஜப்பான், நியூசிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பிரிட்டனிலும் 4 நாட்கள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் 70 நிறுவனங்களில் இத்திட்டம் 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 3300 ஊழியர்கள் இத்திட்டத்தில் பணி புரிகின்றனர்.

Exams Daily Mobile App Download

டிசம்பர் மாதம் வரை 6 மாதத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற அடிப்படையில் இந்த சோதனை முயற்சியில் ஊழியர்கள் 4 நாட்கள் வேலை திட்டத்தில் பணி புரிவர் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வீக் குளோபல், திங்டேங்க் அட்டாநமி நிறுவனங்கள் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விடுமுறை நாட்களுக்கும் சேர்ந்து ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here