Post Office இல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை – இன்னும் 4 நாட்கள் மட்டும்!

2
Post Office இல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை - இன்னும் 4 நாட்கள் மட்டும்!
Post Office இல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை - இன்னும் 4 நாட்கள் மட்டும்!
Post Office இல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை – இன்னும் 4 நாட்கள் மட்டும்!

தபால் அலுவலகங்களில் கிராம டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) உதவி தபால் அலுவலர் (ABPM) மற்றும் தபால் ஊழியர் (DakSevak) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிய நிலையில், பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே அவகாசம் உள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்த வேலைக்கான தகுதிகள், குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) உதவி தபால் அலுவலர் (ABPM) மற்றும் தபால் ஊழியர் (DakSevak) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாடு முழுவதும் மொத்தம் 38,926 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு, விண்ணப்பிக்க விண்ணப்பதாரர், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

TNPSC ரூ.75900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 42 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

இந்த வகையில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மேலும் தபால் அலுவலர் (BPM) பணிக்கு தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும். இதை அடுத்து உதவி தபால் அலுவலர் மற்றும் தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணிக்கு ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

மேலும் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தேர்வு எதுவும் கிடையாது. இதை அடுத்து, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022 ஆகும். இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!