இப்பகுதிகளில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

0
இப்பகுதிகளில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - அறிவிப்பு வெளியீடு!
இப்பகுதிகளில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - அறிவிப்பு வெளியீடு!
இப்பகுதிகளில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு இன்று முதல் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது.

பள்ளிகள் விடுமுறை:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த காரணத்தால் பொதுமக்கள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகினர். தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் அதிகம் கூடுவதனை தடுக்க பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.

வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு – பிரபல அரசு வங்கி முக்கிய அறிவிப்பு!

முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. எனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் 1ம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டது.

அக்.29 பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்நிலையில் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேவர் குருபூஜை பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் இன்று மருது சகோதரர்கள் குருபூஜை நடைபெற உள்ளதால் அன்றைய நாளில் காளையார்கோவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here