இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை – பிரபல நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

0
இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை - பிரபல நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை - பிரபல நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை – பிரபல நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

இப்போது TCS நிறுவனத்தை தொடர்ந்து ஜப்பானை சேர்ந்த பேனஸானிக் நிறுவனமும் தனது ஊழியர்களை வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே வேலைக்கு வர அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வார விடுமுறை

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று ஓய்ந்து வந்ததற்கு பிறகு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை படிப்படியாக குறைத்து, அலுவலகங்களை மீண்டும் திறந்துள்ளன. ஆனால், முன்பை போல இல்லாமல் இப்போது பல்வேறு துறைகள் தங்களது ஊழியர்களை வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி IT துறையான TCS சுமார் 2 வருடங்களுக்கு பிறகு தனது மூத்த ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

அந்த வகையில் TCS ஊழியர்களுக்கு 5 நாட்களுக்குப் பதிலாக 4 நாட்கள் வேலை வாரமாக இருக்கும். இப்போது, டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்றொரு பெரிய நிறுவனமும் வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறையை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஜப்பானில் செயல்பட்டு வரும் Panasonic நிறுவனம், தனது ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது. அதாவது, ஊழியர்கள் அதிக விடுமுறையை எடுக்க வேண்டாம் என்றும், குடும்பத்துடன் நேரத்தை செலவிட, வித்தியாசமான படிப்பை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு விடுமுறை அளிக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது, Panasonic நிறுவனத்தின் இந்த முடிவு சோதனை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இது, வேலை மற்றும் அதன் பலன்களிலிருந்து சோதிக்கப்பட்ட பின்னர், இந்த முடிவை நிரந்தரமாக வைத்திருப்பது குறித்து நிறுவனம் இறுதி முடிவை எடுக்கும் என்று தகவல் பெறப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜப்பானில் உள்ள ஹிட்டாச்சி, மிசுஹோ பைனான்சியல் குரூப், ஃபாஸ்ட் ரீடெய்லிங், யூனிக்லோ போன்ற பெரிய நிறுவனங்களும் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் அலுவலக வேலை நாட்களாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here