தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை – போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை - போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை - போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை – போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!

தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல தமிழக அரசு சார்பில் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பயணம் மேற்கொள்வார்கள்.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மாநிலம் முழுவதும் அமலில் இருந்த கொரோனா விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டன. இதனால் தமிழக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பண்டிகை நாட்கள் வரிசையாக வர உள்ளது. புத்தாண்டு, புனித வெள்ளி என கொண்டாட்டங்கள் வர உள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை காரணமாகவும், கல்வி நிமித்தமாகவும் பலர் அதிகளவில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? ஊருக்குள் நுழைந்த XE வகை கொரோனா வைரஸ்?

இதனால் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஏப்ரல் 14ம் தேதி (புத்தாண்டு) ஏப்ரல் 15(புனித வெள்ளி) மற்றும் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை என 4 நாட்கள் விடுமுறையை வருவதையொட்டி சென்னையில் பணிபுரியும் மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல வசதியாக 1000 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. மேலும் ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் பேருந்து பயணமே இவர்களின் தேர்வாக உள்ளது. ஏப்ரல் 14-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டு முதல் 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால், மக்கள் சிரமம் இன்றி செல்ல மக்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நாள்தோறும் 2 ஆயிரத்து 500 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 13ஆம் தேதி கூடுதலாக 1000 அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினார். மேலும் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட கூடுதல் பேருந்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகங்களின் சார்பில் கூடுதல் பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன. இதையடுத்து 16-ந்தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் மட்டும் கூடுதலாக 500 பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து விடப்படுகிறது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!