பொறியியல் மாணவர்களுக்கான 3வது கட்ட கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!

0
பொறியியல் மாணவர்களுக்கான 3வது கட்ட கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!
பொறியியல் மாணவர்களுக்கான 3வது கட்ட கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!
பொறியியல் மாணவர்களுக்கான 3வது கட்ட கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!

பொறியியல் படிப்புக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்ததை தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி 3-வது கட்ட கலந்தாய்வு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

3வது கட்ட கலந்தாய்வு:

சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இதுவரை 2 ஆம் கட்ட கலந்தாய்வுகள் நடைபெற்று, மாணவர்கள் அதிகளவு தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 13ம் தேதி தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார். 2 ஆம் கட்ட கலந்தாய்வில் கல்லுரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்கள் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டம் தொடக்கம் – பிரதமர் மோடி துவக்கி வைப்பு!

Exams Daily Mobile App Download

பொறியியல் படிப்புக்கான 4-வது கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் 12- ஆம் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம் எனவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொறியியல் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!