மத்திய அரசு ஊழியர்களுக்கு 39% அகவிலைப்படி (DA) தொகை? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 39% அகவிலைப்படி (DA) தொகை? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 39% அகவிலைப்படி (DA) தொகை? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 39% அகவிலைப்படி (DA) தொகை? முழு விவரம் இதோ!

தற்போது 7வது சம்பள கமிஷனின் படி ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி (DA) தொகை 39 சதவீதமாக உயரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

அகவிலைப்படி உயர்வு

இந்த ஆண்டின் இரண்டாவது அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் முன்பு எதிர்பார்த்ததை விட இப்போது பெரிய ஊதிய உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். இதற்கு முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட DA உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட போதிலும் இப்போது தொழிலாளர்களுக்கான சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அல்லது CPI(IW) தரவு காரணமாக இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 34 சதவீதமாக இருக்கும் DA தொகை அடுத்ததாக 38 சதவீதத்தை எட்டும் என்று தெரிகிறது.

Exams Daily Mobile App Download

ஆனால் இப்போது ஊடகங்களில் வெளிவரும் சமீபத்திய அறிக்கைகள் இந்த DA உயர்வு 5 சதவீதமாக இருக்கும் என்று கூறுகின்றன. இந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இப்போது பணவீக்கத்திற்கு எதிராக மத்திய அரசு ஊழியர்கள் பெறக்கூடிய நிவாரணம் ஜூலை மாதத்தில் அதிகமாக உயரக்கூடும் என்று கணிப்புகள் தெரிவிக்கிறது. அந்த வகையில் எதிர்பார்க்கப்படும் 4 சதவீத உயர்வுடன், இந்த கூடுதல் தொகையானது அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் ரூ.8,000 முதல் ரூ.27,000 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

இப்போது 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் புதிய டிஏ விகிதம் 39 சதவீதமாக இருக்கும். இதற்கு முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக DA திருத்தம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அடுத்த DA உயர்வை நிர்ணயிக்கும் AICPI குறியீடு ஜனவரியில் 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும் குறைந்துள்ளது. ஆனால், மார்ச் மாதத்திற்கான எண்ணிக்கை 126 ஆக உயர்ந்தது. மேலும் ஏப்ரலில் AICPI எண்ணிக்கை 127.7 ஆக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு ஜூலை மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டபடி 4 சதவீதத்திற்கு பதிலாக 5 சதவீதம் அதிகரித்தால் ஊழியர்கள் பெறும் மொத்த DA 39% எட்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!