18 முதல் 44 வயது வரை 39% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை !!

0
18 முதல் 44 வயது வரை 39% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை !!
18 முதல் 44 வயது வரை 39% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை !!
18 முதல் 44 வயது வரை 39% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை !!

இந்தியாவில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோர்க்கு இதுவரை 39% தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாவும் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி :

இந்தியாவில் கொரோனா இரண்டாம்அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ துறையின் முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிட்ஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. மக்கள் உயிரிழக்கும் இந்த இக்கட்டான காலத்தில் கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. வயதானவர்கள் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதனால் முதலில் 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி வழங்கியது. அதன் பிறகு கடந்த மே மாதம் முதல் 18 வயது முதல் அனைவரும் தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

அதனை தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தும் பணி அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் துரிதப்படுத்தப்பட்டது. மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் சுகாதாரத்துறையினரால் அளிக்கப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கி வருகிறது. மாநில அரசுகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் மூலம் மக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த தொகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

தற்போது வரை இந்தியாவில் 18 வயது 44 வயது வரை உள்ளோர்க்கு 39% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 44 வயது முதல் 60 வயது உட்பட்டோர்க்கு 34.5 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் 60 மேற்பட்டவர்களுக்கு இதுவரை 26.5 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட உள்ளதாவும் நாட்டில் இன்று 181 வது நாளாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here