தமிழகத்தில் புதிதாக 37,450 தனியார் வேலைவாய்ப்புகள் – அரசு ஒப்பந்தம்!

0
தமிழகத்தில் புதிதாக 37,450 தனியார் வேலைவாய்ப்புகள் - அரசு ஒப்பந்தம்!
தமிழகத்தில் புதிதாக 37,450 தனியார் வேலைவாய்ப்புகள் - அரசு ஒப்பந்தம்!
தமிழகத்தில் புதிதாக 37,450 தனியார் வேலைவாய்ப்புகள் – அரசு ஒப்பந்தம்!

தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022 ஐ முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். மேலும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் 37,450 வேலை வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு:

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின்பு பொருளாதார நிலை தற்போது தான் சீரடைய தொடங்கியுள்ளது. அதாவது கடந்த சில ஆண்டுக்கு முன்பு நாட்டில் பரவி வந்த நோய் பரவலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் பொதுமுடக்கம், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் வேலை செய்தவர்கள் தங்கள் வேலைகளை இழந்து சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நாடு பொருளாதாரத்தில் நலிவடையத் தொடங்கியது.

கொரோனாவை தொடர்ந்து பொது முடக்கம் காரணமாக நாட்டில் வேலை வாய்ப்பு குறைய தொடங்கியது. இதன் விளைவாக வறுமை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்தது. பிறகு அரசின் தீவிர நடவடிக்கையால் நாடு பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் விதமாக தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நம் தமிழக அரசு பல முன்னணி தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதை தவிர தமிழகத்தில் பல இடங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் மாணவர்களுக்கு உயர்கல்வியில் தரம் – ஆக.30ல் முதல்வர் ஆலோசனை!

அந்த வகையில் தமிழ்நாடு அரசு காலணி மற்றும் தோல் பொருட்கள் பற்றிய 2022ம் ஆண்டுக்கான கொள்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மேலும் இம்மாநாட்டில் 2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

அதாவது,

1. கோத்தாரி – பீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (காலணி உற்பத்தி)

2. கோத்தாரி – பீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு)

3. கோத்தாரி – SEMS குழுமம் (தோல் அல்லாத காலனி உற்பத்தி)

4. வேகன் குழுமம் (தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி)

5. வாக்கரூ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (தோல் அல்லாத காலணி உற்பத்தி)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!