தமிழக அரசின் மின் வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள் – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசின் மின் வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள் - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசின் மின் வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள் - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசின் மின் வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள் – வலுக்கும் கோரிக்கை!

தமிழ்நாட்டில் புதிய மாற்றத்துக்கான ஆட்சி உருவாகிவிட்டது என்ற நம்பிக்கை அளிக்கும் வகையிலேயே மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் ஆற்றல் துறையின் கீழ் தமிழ்நாடு மின்சார வாரியம் இயங்குகிறது. இந்நிலையில் மின் வாரியத்தில் உள்ள 36 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வலுக்கும் கோரிக்கை:

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல நலத்திட்டங்களை தற்போதைய திமுக அரசு அமல்படுத்தி வருகிறது. தி.மு.க தலைமையிலான அரசு பதவி ஏற்று 1 வருடம் நிறைவடையப் போகிறது. தி.மு.க பொறுப்பேற்கும் போது தமிழ்நாடு கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினாலும் பெரிய அளவில் கடனிலும் சிக்கியிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த கையோடு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனாகால நிதி உதவியாக 4,000 ரூபாய், ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களின் சிகிச்சைச் செலவை அரசே ஏற்கும் என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியது.

PBKS vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – பஞ்சாப் கிங்ஸ் உத்தேச XI அணி!

இதனை அடுத்து தேர்தல் பரப்புரையின் போது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்து மாவட்டம்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகப் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஒரு புதிய துறையை உருவாக்கியது. மேலும், பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், ஆன்மிகம் என அனைத்துத் துறைகளுக்கும் சிறந்த வல்லுநர்களை நியமித்து குழுக்களை அமைத்ததெல்லாம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினர் மத்தியிலும் பலத்த வரவேற்பைப் பெற்றது. கொரோனா வருகையால் நிலவிய வேலைவாய்ப்பின்மை போக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் நெல்லை மின் பகிர்மான வட்ட கிளையின் கூட்டம் நெல்லை சந்திப்பில் நேற்று நடைபெற்றது.

ExamsDaily Mobile App Download

இந்த கூட்டத்திற்கு வட்ட தலைவர் மயிலேறும் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில தலைவர் கண்ணன், பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்ட இணைச்செயலாளர் பழனிக்குமார், நிர்வாகிகள் மகாராஜன், சந்திரகுமார், நயினார், மாதவன், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் மின் வாரியத்தில் உள்ள 36 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர். மேலும் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட பஞ்சப்படி ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளனர். தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!