TNUSRB பதவிகளுக்கு 3,552 காலிப்பணியிடங்கள் – தேர்வுக்கு தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!

0
TNUSRB பதவிகளுக்கு 3,552 காலிப்பணியிடங்கள் - தேர்வுக்கு தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!
TNUSRB பதவிகளுக்கு 3,552 காலிப்பணியிடங்கள் - தேர்வுக்கு தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!
TNUSRB பதவிகளுக்கு 3,552 காலிப்பணியிடங்கள் – தேர்வுக்கு தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!

தமிழக காவல்துறையில் காலியாக இருக்கும் 3552 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பாடத்திட்டம், தேர்வு முறை, கல்வித் தகுதி உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

காவலர் தேர்வு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), தமிழக காவல்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இரண்டாம் நிலை காவலர் பதவியில் காலியாக இருக்கும் 3,552 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை TNUSRB தற்போது வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறை, இதனுடன் தேர்வுக்கு தயாராவதற்கான பாடத்திட்டம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download

பொதுவாக காவலர் பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை எழுத்து மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. அந்த வகையில் இதற்கான எழுத்துத்தேர்வு தமிழ் மொழி மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு என இரண்டு பகுதிகளாக நடைபெறும். இப்போது தமிழ் மொழித் தகுதி தேர்வில் 40% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முதன்மை தாள் மதிப்பீடு செய்யப்படும். இந்த பிரிவில், இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அடுத்தபடியாக முதன்மை எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் முறை ரத்து – மாணவர்கள் அதிர்ச்சி!

இதில் பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் கேட்கப்படும். இப்போது காவலர் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் தமிழ் மற்றும் பொது அறிவு பகுதிகளுக்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை படித்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் தமிழ் இலக்கண பிரிவில் எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழை திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் கவனம் அவசியம்.

தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு நூல்களை குறித்து படித்து வைத்துக் கொள்ளவும். அதே போல தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் என்ற பிரிவில் தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு ஆகியவற்றில் கவனம் .வேண்டும்.

தொடர்ந்து முதன்மை எழுத்துத்தேர்வின் பொது அறிவு பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு மற்றும் ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும். மேலும், உளவியல் பிரிவில் தொடர்பு அல்லது தொடர்பு கொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களை கையாளும் திறன் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அதே போல கணித பாடப்பிரிவில் சுருக்குதல், மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம, எண்ணியல், விகிதம், சதவீதம், சராசரி, வயது கணக்குகள், லாபம், நட்டம், நேரம், வேலை, சங்கிலி தொடர், குழாய், தண்ணீர் தொட்டி, தனிவட்டி, கூட்டு வட்டி, அளவியல், பரப்பளவு, கன அளவு, புள்ளியியல், கோணங்கள், இயற்கணிதம், தரவு கணக்கீடு ஆகியவை கேட்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!