மத்திய அரசு சார்பில் ரூ.3500 உதவித்தொகை வழங்கும் திட்டம் – PIB விளக்கம்!

0
மத்திய அரசு சார்பில் ரூ.3500 உதவித்தொகை வழங்கும் திட்டம் - PIB விளக்கம்!
மத்திய அரசு சார்பில் ரூ.3500 உதவித்தொகை வழங்கும் திட்டம் - PIB விளக்கம்!
மத்திய அரசு சார்பில் ரூ.3500 உதவித்தொகை வழங்கும் திட்டம் – PIB விளக்கம்!

இந்தியாவில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.3500 நிதி உதவி வழங்கப்படும் என்ற போலியான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த செய்தி குறித்த உண்மை தகவலை இப்பதிவில் காண்போம்.

போலி தகவல்:

இந்தியாவில் கொரோனா பேரிடர் தொடங்கியது முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் சாமானிய மக்கள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கினர். சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தது. இதன் விளைவாக போலியான தகவலும் பரவ ஆரம்பித்தது. ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத தகவல்கள் அதிகம் பரவ தொடங்கியது. மேலும் மக்கள் ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் நிலையில் பிரபல நிறுவனங்களில் அதிக ஊதியத்துடன் வேலைவாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பகிரப்பட்டது.

தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!

இதன் உண்மை நிலை அறியாமல் ஏராளமானோர் தங்கள் பணத்தை இழந்தது பாதிக்கப்பட்டனர். இது குறித்து பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டது. அதனை தொடர்ந்து தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் தடுப்பூசிகள் குறித்து தவறான பதிவுகளும் பரவி வந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது பிரதான் மந்திரி பிரோஜ்கார் பட்டா யோஜனா என்ற திட்டம் மூலம் நாட்டு மக்களுக்கு மத்திய அரசு ரூ.3500 வழங்கவுள்ளதாக தகவல் ஒன்று வாட்ஸ் ஆப் வாயிலாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!

அதில் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.3500 வழங்க உள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்புபவர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பிஐபி விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற போலியான தகவல்கள் சமீப நாட்களாகவே வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில் அதிகமாகவே பரவி வருகின்றன. இதுபோன்ற செய்திகள் வந்தால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம். லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here