மகளிர் சுய உதவிக் குழுவினர் வீடு கட்ட 35,000 ரூபாய் – முதல்வர் அறிவிப்பு!

0
மகளிர் சுய உதவிக் குழுவினர் வீடு கட்ட 35,000 ரூபாய் - முதல்வர் அறிவிப்பு!
மகளிர் சுய உதவிக் குழுவினர் வீடு கட்ட 35,000 ரூபாய் - முதல்வர் அறிவிப்பு!
மகளிர் சுய உதவிக் குழுவினர் வீடு கட்ட 35,000 ரூபாய் – முதல்வர் அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு வீட்டுத் திட்டம் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த திட்ட பயனாளிகளுக்கு கூடுதல் சலுகைகளையும் அறிவித்து உள்ளார்.

அரசு வீட்டுத் திட்டம்:

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தான் பதவியேற்றதில் இருந்து மாநிலத்தில் உள்ள மக்களின் நல்வாழ்விற்காக பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து, அவற்றை நிறைவேற்றியும் வருகிறார். இதன் மூலம் மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். அந்த வகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் சூரிய மின்சக்தி சலுகையை ஆந்திர அமைச்சரவை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைவு – இன்றைய நிலவரம்!!

இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் விவசாயத் துறைக்கு தரமான மற்றும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக மாநிலத்திற்கு 9,000 mw சோலார் மின்சாரத்தை வழங்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அரசு சூரிய மின் நிலையத்தை நிறுவ தேவையில்லை, அதற்கு பதிலாக SECI இலிருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ளாம். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு யூனிட்டுக்கு 2.49 மின்சாரம் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் 1983 மற்றும் 2011க்கு இடையில் அரசு வீட்டுத் திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வீட்டுக் கடன்களுக்கு தீர்வு கிடைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் நிலையங்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிப்பு – டிஜிபி அறிவிப்பு!

மேலும், மாநில போக்குவரத்து அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையா, மாநில அரசின் வீட்டுத் திட்டத்தின் மூலம் மொத்தம் 46,61,737 பேர் பயனடைவார்கள். ஆந்திர வீட்டுவசதி கழகத்தின் கடன் பெற்றவர்கள் டிசம்பர் 15 வரை நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தி ITS- ஐப் பெறலாம். மேலும், 3 சதவிகித வட்டி விகிதத்தில் சுயஉதவிக் குழு மூலம் வீட்டுத் திட்டத்தில் கடன் பெற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.35,000 கடனாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!