EPFO பயனர்கள் கவனத்திற்கு – ரூ. 35 லட்சம் வரை இழப்பு!

0
EPFO பயனர்கள் கவனத்திற்கு - ரூ. 35 லட்சம் வரை இழப்பு!
EPFO பயனர்கள் கவனத்திற்கு - ரூ. 35 லட்சம் வரை இழப்பு!
EPFO பயனர்கள் கவனத்திற்கு – ரூ. 35 லட்சம் வரை இழப்பு!

பயனர் ஒருவரது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்தை, அவசர காரணங்கள் நிமித்தமாக முன்கூட்டியே எடுப்பவர்களுக்கு ரூ. 35 லட்சம் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக EPFO அமைப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது.

EPFO தகவல்

அரசு மற்றும் தனியார் என அனைத்து துறைகளிலும் வேலை பார்த்து வரும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவை வருங்காலத்துக்காக சேமித்து வைக்கப்படுவது உண்டு. இந்த பணத்தை ஊழியர் ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் நிதி நெருக்கடி ஏற்படும் சமயத்தில், அல்லது அதற்கு முன்னாக சில தேவைகளுக்காகவோ அவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் இந்த EPFO அமைப்பு, குறைந்த அளவுடைய வட்டியுடன் சில கடன் தொகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.

நாடு முழுவதும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் – 12 ஆம் வகுப்பு மாணவி மனு!

இதற்கிடையில் சில நெருக்கடியான சூழலை ஒருவர் எதிர்கொள்ளும் போது, இந்த PF பணத்தை எடுத்து செலவழிப்பது உண்டு. அந்த வகையில் கொரோனா தொற்று காலத்தில், நாடு முழுவதும் சுமார் 70 லட்சம் PF பயனர்கள் தங்களது கணக்கை முடித்துள்ளனர். சிலர் மருத்துவ காரணங்களுக்காக இவ்வகை சேவைகளை பயன்படுத்தி இருந்தாலும் இது இழப்பை ஏற்படுத்தும் என EPFO அமைப்பு எச்சரித்துள்ளது. அதனால் சூழ்நிலைகளை பொறுத்து தான் இந்த பணத்தை உபயோகிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதாவது ஊழியர் ஒருவருக்கு 30 வயது ஆகிறதென்றால், அவர் ஓய்வுபெற இன்னும் 30 ஆண்டுகாலம் இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

இப்போது அவர் ஏதோவொரு காரணத்துக்காக ரூ.1 லட்சம் பணத்தை PF கணக்கில் இருந்து எடுத்தால், அவருக்கு ரூ.11.55 லட்சம் வரை இழப்பு ஏற்படும். இதன் மூலம் அந்நபரது கணக்கு முடிவில் ரூ. 35 லட்சம் வரை இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது PF சேமிப்பு திட்டம் 8.5% வட்டியை வழங்குகிறது. பொதுவாக ஒருவரது மாத சம்பளத்தில் 12% PF ஆக கணக்கிடப்படுகிறது. இவற்றில் பாதி அளவு ஓய்வூதியமாக சேமிக்கப்படும். இந்த ஓய்வூதியத்தில் அதிகபட்சமாக ரூ.1250 என்ற அடிப்படையில் 8.33% பங்கை நிறுவனம் செலுத்தும். இது தவிர ஓய்வூதியத்திற்கு முன்பே EPF பணத்தை திரும்ப பெறும் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது கூடுதல் தகவல்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!