மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு - விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு - விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு AICPI குறியீடு வெளிவந்ததை அடுத்து 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஆகும்.

34% அகவிலைப்படி (DA) உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு , வீட்டு வாடகைப்படி உயர்வு, சம்பள உயர்வு அறிவிப்பு கொரோனா தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வு 31 சதவீதமாக வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான (2022) அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படும் என ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதன் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34% வீதத்தில் அகவிலைப்படி கிடைக்கும்.

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு வேலை கிடையாது – உத்தரவு பிறப்பிப்பு!

தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் (AICPI Index) அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 2021 குறியீட்டில் ஒரு புள்ளி குறைந்துள்ளது. சராசரி 12 மாத குறியீடு 351.33 ஆகியுள்ளது. இதன் சராசரி 34.04% ஆகும். எனினும் அகவிலைப்படி எப்போதும் முழு எண்களில் வழங்கப்படுகிறது. அதாவது, ஜனவரி 2022 முதல், மொத்த அகவிலைப்படி 34% கிடைப்பது உறுதி ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்.19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பிப்.17 முதல் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை!

இந்த நிலையில் DA கால்குலேட்டர் ஜூலை 2021 – AICPI-353 – அகவிலைப்படி – 31.81%, ஆகஸ்ட் 2021 – AICPI-354 – அகவிலைப்படி – 32.33%, செப்டம்பர் 2021 – AICPI- 355- அகவிலைப்படி – 32.81% ,நவம்பர் 2021 – AICPI – 362.016- அகவிலைப்படி – 33 % , டிசம்பர் 2021 – AICPI – 361.152 – அகவிலைப்படி – 34% ஆகும். அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்ட பிறகு, மொத்த அகவிலைப்படி 34% ஆக இருக்கும். இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும் மற்றும் மாதம் அகவிலைப்படி அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here