மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? கணக்கீடு விவரங்கள் வெளியீடு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? கணக்கீடு விவரங்கள் வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? கணக்கீடு விவரங்கள் வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? கணக்கீடு விவரங்கள் வெளியீடு!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகையுடன் சேர்த்து 3% DA உயர்வும் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

வரவிருக்கும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) குறித்த ஒரு நல்ல செய்தி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு அகவிலைப்படி தொகையை 31% ஆக உயர்த்தி அறிவித்தது. ஆனால் இத்தொகை இன்னமும் அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அந்த வகையில் இந்த முறை ஹோலி பண்டிகை காலத்தில் அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 23 (நாளை) வரை விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!

இப்போது நீண்ட காத்திருப்புக்கு பிறகு, அகவிலைப்படியில் 3% உயர்வு நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34% வீதத்தில் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இப்போது டிசம்பர் 2021 குறியீட்டில், தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டில் (AICPI) ஒரு புள்ளி குறைந்து, அகவிலைப்படிக்கான சராசரி 12 மாத குறியீடு 351.33 என்றும் சராசரியாக 34.04% அகவிலைப்படி (DA) கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது, ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெறுகின்றனர். ஆனால் ஜனவரி 2022 முதல், 3% கூடுதல் அகவிலைப்படி கிடைக்க வாய்ப்புள்ளது. இப்போது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மட்டுமே அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மேலும் மார்ச் மாதம் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த முடிவால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PF பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் இதோ!

இதற்குப் பிறகு, அடுத்த அகவிலைப்படி ஜூலை 2022 இல் கணக்கிடப்படும். அந்த வகையில் டிசம்பர் 2021க்கான AICPI-IW தரவு படி, இந்த எண்ணிக்கை 0.3 புள்ளிகள் குறைந்து 125.4 புள்ளிகளாக இருந்தது. நவம்பரில், இந்த எண்ணிக்கை 125.7 புள்ளிகளாக இருந்தது. டிசம்பரில் 0.24% குறைந்துள்ளது. ஆனால், இது அகவிலைப்படி உயர்வை பாதிக்கவில்லை. இப்போது தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகளின்படி, நவம்பர் 2021 இல் AICPI-IW குறியீடு 0.8% அதிகரித்து 125.7ஐ எட்டியது. இதிலிருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படும் என்பது தெளிவாகிறது.

ஜூலை 2021 முதல் DA கணக்கீடு:
 • ஜூலை 2021 – 353 31.81%
 • ஆகஸ்ட் 2021 – 354 32.33%
 • செப்டம்பர் 2021 – 355 32.81%
 • நவம்பர் 2021 – 362.016 33 %
 • டிசம்பர் 2021 – 361.152 34%
DA மதிப்பெண்களின் கணக்கீடு:
 • ஜூலைக்கான கணக்கீடு – 122.8 X 2.88 = 353.664
 • ஆகஸ்டுக்கான மொத்தம் – 123 X 2.88 = 354.24
 • செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு – 123.3 X 2.88 = 355.104
 • நவம்பர் மாதத்திற்கான கணக்கீடு – 125.7 X 2.88 = 362.016
 • டிசம்பர் மாதத்திற்கான கணக்கீடு – 125.4 X 2.88 = 361.152
34%ல் DA கணக்கீடு:
 • பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000
 • புதிய அகவிலைப்படி (34%) ரூ.6120/மாதம்
 • அகவிலைப்படி இதுவரை (31%) ரூ.5580/மாதம்
 • அகவிலைப்படி அதிகரிப்பு 6120- 5580 = ரூ 540/மாதம்
 • ஆண்டு ஊதிய உயர்வு 540X12 = ரூ.6,480
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!