சோப்பு, சாம்பு உள்ளிட்ட பொருட்களின் விலை 33% வரை அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!

0
சோப்பு, சாம்பு உள்ளிட்ட பொருட்களின் விலை 33% வரை அதிகரிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி!
சோப்பு, சாம்பு உள்ளிட்ட பொருட்களின் விலை 33% வரை அதிகரிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி!
சோப்பு, சாம்பு உள்ளிட்ட பொருட்களின் விலை 33% வரை அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, சேம்பு, பிஸ்கட், கோல்கேட் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை வரும் மாதங்களில் 4% முதல் 33% வரை உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

33% வரி விலை உயர்வு:

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையை குறிப்பிட்ட நிறுவனங்கள் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சோப்பு, சேம்பு, பிஸ்கட், கோல்கேட், பெர்ப்யூம் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பானது ஐடிசி ஹிந்துஸ்தான் யூனி லிவர், பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி இலவச தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – 16 நிமிடத்தில் முன்பதிவு!

அதன்படி ஹிந்துஸ்தான் யூனி லிவர் நிறுவனம் தயாரிக்கும் டவ் சோப்பு, ஷாம்பு மற்றும் பெர்சனல் கேர் பொருட்களின் விலையை வரும் வாரங்களில் 12% வரை உயர்த்தவுள்ளதாக கூறியுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இது 2வது முறையாக இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் ரின் சோப்புகள் 5% விலை உயர்த்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து லக்ஸ் சோப்பு மற்றும் சேம்புகளின் விலை 10% க்கு மேல் உயர்த்தப்படுகிறது. அதேபோல் 19 மில்லி அளவு கொண்ட கம்போர்ட் கண்டிஷனர் விலை 33% வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம்!

பார்லிஜி நிறுவனம் 3 மாதங்களில் 3 மாதங்களில் 15% விலையை ஏற்கனவே உயர்த்தியுள்ள நிலையில் அடுத்த 6 மாதங்களில் மீண்டும் 20% வரை உயர்த்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. டைகர், குட் டே, மில்க் பிக்கீஸ் உள்ளிட்ட பிஸ்கட்டுகளை தயாரிக்கும் பிரிட்டானியா நிறுவனம் 3 மாதங்களுக்குள் 7.5% உயர்த்தவும் அதன் பிறகு 10% உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. ஐடிசி நிறுவனம் பெர்பியும்கள் விலை 7% மும், விவில் சோப்பு விலை 9% மும் உயர்த்த உள்ளதாக முடிவு செய்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள் விலை உயர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here