டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் அறிவிப்பு!

0
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் அறிவிப்பு!
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் அறிவிப்பு!
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் அறிவிப்பு!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தொழில்நுட்ப உதவியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் ஆய்வக நுட்புனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

முழு விவரம்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் எதிரொலியாக முழு ஊரடங்கு, பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இன்மை என பலவிதமான பாதிப்புகள் நிலவியது. மேலும் அரசு, தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியிடாமல் இருந்தது. மேலும் கொரோனா பாதிப்பு சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்த வகையில் தற்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் மூடல் – அரசுக்கு கோரிக்கை!

இந்நிலையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொழில்நுட்ப உதவியாளர்(3), முதுநிலை ஆராய்ச்சியாளர்(3) மற்றும் ஆய்வக நுட்புனர்(1) ஆகும். இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 7,8,10 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு M.Sc. (Agri.) in (Agricultural Microbiology / Biotechnology/ Soil Science & Agricultural Chemistry / Environmental Science / Crop Physiology/ Agronomy/ Breeding/ Pathology/ Entomology ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 31,000 வழங்கப்படும். இந்த வகையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு Diploma in Agri. / Horti. ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசின் ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு – பட்ஜெட் தாக்கலில் அறிவிப்பு!

இந்த பணிக்கான மாத சம்பளம் ரூ.18,000 ஆகும். இதனை தொடர்ந்து ஆய்வக நுட்புனர் பணிக்கு PG Degree in Biological Sciences பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூ. 20,000 மாத சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சுயவிவர குறிப்புகள் அடங்கிய விண்ணப்பத்தை The Dean, Agricultural College and Research Institute, Killikulam (or) The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore (or)The Director, (Extension Education), TNAU, Coimbatore என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இந்த பணிக்கான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!