மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – 31% DA அதிகரிப்பு? விரைவில் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - 31% DA அதிகரிப்பு? விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - 31% DA அதிகரிப்பு? விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – 31% DA அதிகரிப்பு? விரைவில் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 28% அகவிலைப்படி மேலும் 3% உயர்த்தப்பட்டு 31% ஆக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தீபாவளிக்கு முன்னராகவே அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு:

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வருமான இழப்பினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் நோய்த்தொற்று குறைந்ததால் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதனால் மத்திய அரசு சமீபத்தில் 17 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக அகவிலைப்படியினை அதிகரித்துள்ளது. ஊழியர்களுக்கான டியர்னஸ் அலவன்ஸ் (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டியர்னஸ் ரிலீஃப் (டிஆர்) அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும்.

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு – முதலாமாண்டு மாணவர்கள் வருகை!

இந்நிலையில் ஜூலை 2021 க்கான Dearness Allowance (DA) இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் AICPI அறிக்கைககள் ஜனவரி முதல் மே 2021 வரை 3 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என கூறுகிறது. இந்த வழியில், 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும். அதாவது, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்றால், அவருக்கு ரூ .15,500 டிஏ கிடைக்கும். ஊடக அறிக்கையின் படி, மத்திய அரசு தசரா அல்லது தீபாவளிக்கு முன்னர் டிஏவை அதிகரிப்பதாக அறிவிக்கலாம். கடந்த ஆண்டை விட மொத்த அகவிலைப்படி 11 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூலை 2021 முதல் அரசாங்கம் அதை 28 சதவீதமாகக் குறைத்துள்ளது.

IPL 2021: KKR vs SRH – 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி!!

Dearness Allowance என்பது ஊழியரின் அடிப்படை சம்பளத்தின் ஒரு நிலையான பகுதியாகும். நாட்டில் பணவீக்கத்தின் விளைவைக் குறைக்க, அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்குகிறது. இது அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் இந்த நன்மையை டிஆர் வடிவத்தில் பெறுகிறார்கள். மத்திய அரசு அகவிலைப்படியை மேலும் உயர்த்த உள்ளதாக வெளியான தகவல்கள் ஊழியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!