மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு, கூடுதல் போனஸ் தொகை? கணக்கீடு விளக்கம்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு, கூடுதல் போனஸ் தொகை? கணக்கீடு விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு, கூடுதல் போனஸ் தொகை? கணக்கீடு விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு, கூடுதல் போனஸ் தொகை? கணக்கீடு விளக்கம்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை 3% உயர்த்தப்பட்டு அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி வழங்கப்படும் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கான கணக்கீடு விவரங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

DA உயர்வு

கடந்த 2020ம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை இந்த ஆண்டு ஜூலை மாத தவணையுடன் திரும்ப கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மீண்டுமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை கிட்டத்தட்ட 3% அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று – 193 பேர் பலி!

அதாவது அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த அறிவிப்புகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தெரிகிறது. இப்போது தீபாவளிக்கு முன்பு அரசு ஊழியர்களின் DA தொகை 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதாவது 3% அதிகரிப்பு ஏற்படலாம். ஆனால் தற்போது வரை, ஜூலை 2021 க்கான DA குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!

என்றாலும் AICPI தரவு, 2021 ஜனவரி முதல் மே வரை 3% DA அதிகரிக்கக்கூடும் என்பதை தெளிவுபடுத்துகிறது. இதன் படி, அரசு ஊழியர்களுக்கு 3% DA அதிகரித்த பிறகு, அகவிலைப்படி தொகை 31 சதவீதத்தை எட்டும். இப்போது, அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் மொத்த DA தொகை 11 % அதிகரித்துள்ளது. இதனுடன் ஜூலை 2021 முதல் அரசாங்கம் அதை 28 % ஆக குறைத்துள்ளது. இந்த தொகை ஜூன் மாதத்தில் 3 % அதிகரித்தால், அது 31% (17+4+3+4+3) எட்டும். அதாவது, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்றால், அவருக்கு ரூ.15,500 DA கிடைக்கும்.

31% DA இல் கணக்கீடு:

ஒரு பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.56900 என்றால், புதிய உதவித்தொகையின் கீழ் அதாவது 31 சதவீத DA உயர்வு ரூ.17639 ஆக இருக்கும். அதே நேரத்தில் 28 சதவிகித DA உயர்வு மூலம் மொத்த தொகை ரூ.1707 அதிகரிக்கும். அதாவது, சம்பளத்தின் மத்த அதிகரிப்பு ஆண்டுதோறும் ரூ. 20484 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!