தமிழக அரசு பள்ளிகளில் 3000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்? அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் நியமனம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வாணையத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக ஆசிரியர் போட்டி தேர்வு நடைபெறவில்லை. கொரோனா தாக்கத்திற்கு பிறகு 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை பற்றாக்குறை நிலவியது. இதனை பூர்த்தி செய்யும் வண்ணம் முதல் கட்டமாக 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான டெட் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நேரத்தில் தற்போது காலியாக உள்ள 13,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தற்காலிக பணியிடங்களில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் நாளை (ஆக. 22) மின்தடைக்கான பகுதிகள் – மின்சார வாரியம் தகவல்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தமிழகத்தில் அடுத்த மாதத்திற்குள் மூவாயிரம் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆசிரியர் பணிக்கு செல்ல வேண்டும் என்று கனவோடு இருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்