தமிழக சமூக நலத்துறையில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக சமூக நலத்துறையில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக சமூக நலத்துறையில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக சமூக நலத்துறையில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

கரூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் விரும்பும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு தொடங்கியுள்ளதை அடுத்து அரசு போட்டித் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு தேர்வாணையம் தேர்வு கால ஆண்டு அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2022ம் ஆண்டு 21 வகையான அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கரூர் மாவட்ட சமூக நலத்துறையில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்! மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் MS தோனி!

சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி, வழக்கு கையாளுபவர், ஓட்டுநர், பல்நோக்கு உதவியாளர் ஆகிய 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப டவுள்ளனர். மைய நிர்வாகி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Master’s of Social Work, Counselling Psycology or Development Management or Law படித்திருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும். அடுத்ததாக வழக்கு கையாளுபவர் இப்பணிக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளது. Master’s of Social Work, Counselling Psychology or Development Management கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதியம் 15,000 வழங்கப்படும்.

TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – பிப்.15ம் தேதி கலந்தாய்வு!

ஓட்டுநர்/ காவலர் பணியிடங்கள் 2 இடங்கள் உள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மாதம் ரூ.10,000 ஊதியமாக வழங்கப்படும். பல்நோக்கு உதவியாளர் பணியில் 1 காலியிடம் உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 21 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பெற்று அதை முறையாக பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் என்ற முகவரிக்கு பிப்ரவரி 7ம் தேதிக்குள் அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!