சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.30,000 ஊதிய உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

0
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.30,000 ஊதிய உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.30,000 ஊதிய உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.30,000 ஊதிய உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை எம்எல்ஏக்களுக்கு மத்திய அரசு பரிந்துரைக்கும் சம்பளத்திற்கு ஒப்புதல் அளித்ததுள்ளது. இதன்படி, எம்எல்ஏக்கள் மாதம் ரூ.30,000 ஊதிய உயர்வினை பெறுவார்கள்.

ஊதிய உயர்வு:

2011 ஆம் ஆண்டிலிருந்து டெல்லியின் எம்எல்ஏக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்றும், டெல்லி மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் மற்ற மாநிலங்களின் எம்எல்ஏக்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருந்தது. மேலும், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கும் மாநிலங்களின் எம்எல்ஏக்கள், டெல்லி எம்எல்ஏக்களை விட இரண்டு மடங்கு ஊதியம் பெறுவதாக முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

IND vs ENG முதல் டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி தடுமாற்றம்! பும்ராஹ் அசத்தல்!

இதனால் டெல்லி அரசு எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. டெல்லி அரசு எம்எல்ஏக்களுக்கு ரூ.54,000 சம்பளம் வழங்க கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய அரசு அதை ரூ.30,000 ஆக நிர்ணயித்துள்ளது. இப்போது டெல்லியின் எம்எல்ஏக்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மத்திய அரசால் ரூ. 90,000 ஆக மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை, எம்எல்ஏக்களுக்கு மத்திய அரசு பரிந்துரைக்கும் சம்பளத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

டெல்லி எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, முன்மொழிவு மற்றும் வரைவு மசோதாக்கள் டெல்லி சட்டசபையில் வைப்பதற்கு முன்பு உள்துறை அமைச்சகத்தின் (MHA) ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இந்த தகவல்கள் அனைத்தும் டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!