வங்கி ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 30% உயர்வு – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

0
வங்கி ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 30% உயர்வு - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!
வங்கி ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 30% உயர்வு - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!
வங்கி ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 30% உயர்வு – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

மத்திய அரசு, வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை அவர்கள் இறுதியாக பெற்றுக்கொண்ட சம்பளத்தில் இருந்து சுமார் 30 சதவிகிதத்தை உயர்த்தியுள்ளதாக நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் தேபாசிஷ் பாண்டா தெரிவித்துள்ளார்.

ஊதியம் அதிகரிப்பு

அரசுத்துறைகளில் பணி புரியும் அனைத்து விதமான ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் அகவிலைப்படி, பயணப்படி, மருத்துவ கொடுப்பனவு உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனுடன் அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும் போதும் அவருக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு, வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை சில திருத்தங்களுடன் அறிவித்துள்ளது. அதன் கீழ் ஒரு வங்கி ஊழியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற போது அவர் வாங்கிய சம்பளத்தில் இருந்து சுமார் 30% உயர்வை ஓய்வூதியத்தில் அளிக்க திட்டமிட்டுள்ளது.

கோவிட்-19 இன்னும் முடியல, அடுத்து கோவிட்-22 வரப்போகுதாம் – மக்களே உஷார்!

இந்த நடவடிக்கையின் மூலம், வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை அதிகரிக்கலாம் என மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் தேபாசிஷ் பாண்டா தெரிவித்துள்ளார். இதனுடன் வங்கி ஊழியர்களுக்கான 10 சதவிகித ஓய்வூதியத் தொகையை 14 சதவிகிதமாக அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் வங்கி ஊழியர்களின் சம்பளம் இந்த மாதம் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதற்கு முன்னதாக வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) கடந்த காலாண்டில் 2.1% அதிகரித்து 27.79% மாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை அமலுக்கு வரும் எனவும் இவை 11 வது BPS சம்பள அமைப்பைப் பின்பற்றும் வங்கியாளர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பை கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், 10 வது BPS வங்கி ஊழியர்களுக்கு 3 சதவீதம் DA அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும். மத்திய அரசின் இந்த முடிவால் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here