Airtel vs VI vs Jio நிறுவன வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Airtel vs VI vs Jio நிறுவன வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டங்கள்!
Airtel vs VI vs Jio நிறுவன வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டங்கள்!
Airtel vs VI vs Jio நிறுவன வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டங்கள்!

இந்திய நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை, 30 நாள்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டங்களின் சிறப்பமசங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகமான பிறகு பல மாற்றங்களை எதிர்கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களாக நிலையான வர்த்தகம் மற்றும் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. பொதுவாக மாதாந்திர ப்ரீபெய்டு பிளான்கள் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கொண்டிருந்தது. TRAI டெலிகாம் ஆபரேட்டர்கள் குறைந்தபட்சம் ஒரு ரீசார்ஜ் திட்டத்தையேனும் 30 நாட்களுக்கு வழங்குமாறு உத்தரவிட்டு இருந்தது.

PF கணக்குதாரர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் முதல் புதிய விதிகள் அமல்! முழு விவரம் இதோ!

இந்த உத்தரவின் பேரில் அண்மையில் 30 நாள்கள் வேலிடிட்டி கொண்ட ட்ரூ பிளானை ஜியோ அறிமுகம் செய்திருந்தது. இதை அடுத்து ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு சிம் கார்டு பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரண்டு பிளான்களை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்து உள்ளது. இதனால் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வோடபோன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ296 திட்டம் – 30 நாள் வேலிடிட்டி:

இந்த திட்டமானது, 30 நாள்கள் வேலிடிட்டி கொண்டது. அதில், வரம்பற்ற அழைப்புகள் மட்டுமின்றி தினமும் 100 sms அனுப்பிக்கொள்ளலாம். மேலும் 25 GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒப்பிடுகையில், ஜியோவின் ரூ.209 திட்டமானது 28 நாள்கள் செல்லுப்படியாகும். வரம்பற்ற கால் அழைப்பு, டெய்லி 100 மெசேஜ் மட்டுமின்றி தினமும் தலா 1 GB டேட்டா கிடைக்கிறது. இன்டர்நெட் ஸ்பீட் 64kbps அளவில் இருக்கும்.

இதில் இருக்கும் ஒரே வித்தியாசம், 209 திட்டத்தில் தினமும் கிடைக்கும். 1GB டேட்டா, அன்றைய தினத்தில் காலாவதியாகிவிடும். ஆனால் 296 திட்டத்தில் 25 GB டேட்டாவை எப்போது வேண்டுமானாலும் ஒரேடியாக பயன்படுத்தலாம்.

ஏர்டெல் புதிய ரூ.296, ரூ.319 திட்டங்கள் – 30 நாட்கள் வேலிடிட்டி:

296 ரூபாய் ரீசார்ஜ் திட்டம், 30 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பும், தினமும் 100 SMS அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கூடுதலாக 25 ஜிபி டேட்டா ,டேட்டா தீர்ந்து விட்டால், பயனர் உபயோகிக்கும் ஒவ்வொரு MB டேட்டாவுக்கும் 50 பைசா வசூலிக்கப்படும். இதை அடுத்து ஏர்டெல் 319 ரூபாய் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வேலிடிட்டி காலம் 30 நாட்கள் ஆகும். அந்த திட்டத்தின் வரம்பற்ற வாய்ஸ் கால், டெய்லி 100 SMS, தினமும் 2 GB டேட்டாவும் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா: ரூ.327, ரூ.337 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.327 திட்டம் 30 நாட்களுக்கு செல்லுப்படியாகும். அதில் வரம்பற்ற வாய்ஸ் கால், 100 SMS 25 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மற்றொரு ரூ337 திட்டமானது 31 நாள்கள் செல்லுப்படியாகிறது. அதில், வரம்பற்ற வாய்ஸ் கால், 100 SMS, 28ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!