தமிழக மாணவர்களுக்கான 30 நாட்கள் கோடை விடுமுறை? கல்வித்துறை புதிய அறிவிப்பு!

0

தமிழக மாணவர்களுக்கான 30 நாட்கள் கோடை விடுமுறை? கல்வித்துறை புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை கால தேதியும், மீண்டும் பள்ளி திறக்கும் தேதியும், 10, 11, 12 வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் தேதி மற்றும் தேர்வின் முடிவு வெளியாகும் தேதி என அனைத்து தகவல்களையும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை:

இரண்டு வருட கொரோனா காலகட்டத்துக்கு பிறகு எந்த ஒரு தடைகளும் இன்றி நேற்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. அதில் மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் இன்று தொடங்கியது. தற்போது பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில், பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக பல ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

கேரளாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ் – 85 குழந்தைகளுக்கு வைரஸ் உறுதி! அதிர்ச்சிகர தகவல்!

இதற்கிடையே தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலை மற்றும் அக்னி வெயில் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்னதாகவே எழுந்தது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது பேட்டியில் பேசியுள்ளார். அதாவது, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், தேர்வு நாளில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும், கோடை விடுமுறை குறித்து தேதியும் வெளியிட்டார்.

அதாவது, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 14 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறையாக அறிவித்து உள்ளது. மேலும், ஒரு மாதம் கோடை விடுமுறை காலத்துக்கு பிறகு ஜூன் மாதம் 13 ஆம் தேதி, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி மாற்றும் தேர்வு முடிவு:

ஜூன் மாதம் 2 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும்.

ஜூன் மாதம் 23 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

ஜூலை மாதம் 7 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

ஜூன் மாதம் 17 ஆம் தேதி10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here