
சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை – அதிரடி உத்தரவை வெளியிட்ட புதுச்சேரி!
புதுச்சேரி அரசு 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டினால் அவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு உத்தரவு:
உலக நாடுகளை பொறுத்தவரை இந்தியாவில் தான் சாலை விபத்துகள் அதிகமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சாலை விதிகள் சரியாக கடைபிடிக்கப்படாமல் இருப்பது தான். மேலும் தற்போது 18 வயது நிரம்பாத சிறுவர்களுக்கு பைக் மீது மோகம் அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பெற்றோர்களும் ஆசையாக தங்களது குழந்தைகளுக்கு வண்டி வாங்கி கொடுக்கின்றனர். அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி அவர்கள் நினைப்பதில்லை.
ஓய்வூதியதாரர்களுக்கான சூப்பரான அறிவிப்பு – நடப்பு நிதியாண்டில் அடிச்ச பம்பர் லாட்டரி!!
இந்நிலையில் சாலை விபத்துகளை தடுக்க புதுச்சேரி அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டினால் அவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது.
மேலும் புதுச்சேரியின் இந்த உத்தரவை போல தமிழகத்திலும் கடுமையான தண்டனை அமலுக்கு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.