மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட் நாயக் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அதிகரித்து வழங்க முடிவு செய்துள்ளார். அதன்படி கூடுதலாக 3% DA அதிகரித்து வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் என்று பொதுவாக ஆண்டிற்கு இரண்டு முறை திருத்தியமைக்கப்படும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்வடையும். அகவிலைப்படியானது தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தால் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு தவணைக்கான அகவிலைப்படியானது நிதியாண்டின் நாட்டில் பணவீக்கத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. பணவீக்கத் தரவுகளின் அடிப்படையில் முக்கிய பொருளாதார அளவீடுகளுக்கான அடிப்படை ஆண்டை மத்திய அரசு அவ்வப்போது மாற்றி அமைகிறது.

IPL 2022: ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு! காரணம் என்ன?

மத்திய அரசு ஜனவரி 1, 2020 முதலான 3 தவணைகளுக்கு 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தியது. பின்னர் அக்டோபரில், DA 3% அதிகரிக்கப்பட்டு 31% ஆக உள்ளது. ஜனவரி 2022 மாதம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 18 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையைப் பெற லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் ஜனவரி 2022க்கான DA 3% அதிகரிக்கப்பட்டு 34% DA அளிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலுவை தொகை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் முறையில் மாற்ற எளிய வழிமுறைகள்!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி அறிவித்துள்ளார். இந்த முடிவால் மாநிலத்தில் சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளதாக அறிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வானது ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒடிசா மாநில ஊழியர்களுக்கு ஜனவரி 2016 மற்றும் ஆகஸ்ட் 2017 க்கு இடையில் உயர்த்தப்பட்ட 0 சதவீத நிலுவைத் தொகையை வழங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here