மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மீண்டும் 3% DA அதிகரிப்பு? தகவல் வெளியீடு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - மீண்டும் 3% DA அதிகரிப்பு? தகவல் வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - மீண்டும் 3% DA அதிகரிப்பு? தகவல் வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மீண்டும் 3% DA அதிகரிப்பு? தகவல் வெளியீடு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 31% அகவிலைப்படியோடு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்த்தி 34% ஆகவும், 18 மாத நிலுவை தொகையும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பள உயர்வு:

நாடு முழுவதும் அரசுத்துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசு பல்வேறு புதிய திட்டம் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியினால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் பெருமளவு குறைந்துவிட்டது. அதனை தொடர்ந்து பொருளாதார நிதி நெருக்கடியை சரிசெய்து மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்தது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினி எப்படி உள்ளார் தெரியுமா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

அதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 28% அகவிலைப்படியோடு 3% உயர்த்தி 31% வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வழங்கப்பட்டு வரும் 31% அகவிலைப்படியோடு 3% உயர்த்தி 34% ஆக வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.

பாரதி, அகிலுடன் இணைந்த லட்சுமி மற்றும் ஹேமா – விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த எபிசோட்!

அதனை தொடர்ந்து இதுவரை நிலுவையில் இருந்து வரும் 18 மாத நிலுவை அகவிலைப்படி உயர்வும் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த 3% அகவிலைப்படி உயர்த்துதல் மற்றும் 18 மாத நிலுவை அகவிலைப்படி உயர்வு வழங்குதல் மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 34% அகவிலைப்படி உயர்வு மூலம் ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.6,480 மற்றும் ரூ.56,900 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.20,484 வழங்கப்படும். இந்த தொகை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!